புதிய குடிஅரசுத் தலைவர் எப்படி களமாடப் போகிறார் என்பதை காண ஆர்வம் கொண்டுள்ளனர் சமூக ஆர்வலர்கள். பொதுவாக குடிஅரசுத் தலைவர் பதவி தேர்ந்தெடுத்த கட்சிக்கு செஞ்சோற்று கடன் தீர்க்கும் வகைக்கே பயன்பட்டிருக்கிறது. 06,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: இந்திய ஒன்றியத்தில் பதினைந்தாவது குடிஅரசுத் தலைவராக தேர்வாகியுள்ள திரௌபதி முர்முவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய ஒன்றியத்தின் குடிஅரசுத் தலைவராக வீற்றிருந்த ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் நாளை மறுநாள் ஞாயிற்றுக் கிழமையுடன் முடிவடைகிறது. இதனையடுத்து பதினைந்தாவது குடிஅரசுத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான ஓட்டு எண்ணிக்கை கடந்த திங்கட் கிழமை நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. அதில் அதிக வாக்குகளைப் பெற்று இந்திய ஒன்றியத்தின் பதினைந்தாவது குடிஅரசுத் தலைவராக திரௌபதி முர்மு பொறுப்பேற்க உள்ளார். இந்த நிலையில், திரௌபதி முர்முவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் திரௌபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தலைமைஅமைச்சர் மோடி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். பாஜகவின் இந்திய அளவிலான தலைவர் ஜேபி நட்டாவும் திரௌபதி முர்முவை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். பொதுவாகவே குடிஅரசுத் தலைவர் பதவி தேர்ந்தெடுத்த கட்சிக்கு செஞ்சோற்று கடன் தீர்க்கும் வகைக்கே பயன்பட்டிருக்கிறது. புதிய குடிஅரசுத் தலைவர் எப்படி களமாடப் போகிறார் என்பதை காண ஆர்வம் கொண்டுள்ளனர் சமூக ஆர்வலர்கள்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,317.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.