ஒன்றிய பாஜக அரசு மின்சார சட்டத்திருத்த முன்வரைவைத் தற்போது கொண்டு வந்துள்ளது. இதற்கு முன்பாக- கல்வியில், வேளாண்மையில், வரியில், போக்குவரத்;தில், குடியுரிமைச் சட்டத்தில் என்று நிறைய நிறைய சட்ட முன்வரைவுகளை முன்னெடுத்து எதிர்ப்;புகளோடு சட்டமாக்கியுள்ளது. அவைகளில் மிகவலுவான எதிர்ப்போடு நிறைவேற்றப்படாத ஒரே சட்டம் வேளாண்மை சட்டமாகும். 24,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: ஒன்றிய பாஜக அரசு நடைமுறையில் இருக்கும் மின்சார சட்டத்தில், தங்கள் கட்சியின் அடிப்படை நோக்கத்திற்கான மாற்றத்தை முன்னெடுக்கும் வகைக்கு தற்போது மின்சார சட்டத்திருத்த முன்வரைவைக் கொண்டு வந்துள்ளது. இதற்கு முன்பாக- கல்வியில், வேளாண்மையில், வரியில், போக்குவரத்;தில், குடியுரிமைச் சட்டத்தில் என்று நிறைய நிறைய சட்ட முன்வரைவுகளை முன்னெடுத்து எதிர்ப்;புகளோடு சட்டமாக்கியுள்ளது. அவைகளில் மிகவலுவான எதிர்ப்போடு நிறைவேற்றப்படாத ஒரே சட்டம் வேளாண்மை சட்டமாகும். இப்படி முன்னெடுக்கும், ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு சட்டமுன்வரைவிலும் வெளிப்படும் உண்மை- அதிகாரிகள் இருக்கும் இடத்தில் கார்ப்பரேட்டுகளை நிறுவுவது என்பதே ஆகும். பல ஆயிரம் அதிகாரிகளை கண்காணிப்பதற்கு மாற்றாக பத்துக்கு உட்பட்ட கார்ப்பரேட்டுகளை கண்காணிப்பது எளிது என்று கருதுகிறது ஒன்றியத்தை ஆண்டுகொண்டிருக்கும் பாஜக கட்சி. இதே கோணத்தில்தாம் தமிழ் உள்ளிட்ட இருபத்தி இரண்டு மொழிகளை ஆட்சிமொழியாக அறிவிக்கிற அட்டவணை எட்டு சட்டத்தை புறந்தள்ளி தங்களுக்கு தெரிந்த, தங்களின் மொழியான ஹிந்தியை ஒற்றை மொழி ஆளவிட பாஜக கடுமையாக முயன்று வருகிறது. இதே கோணத்தில்தாம் இந்தியாவின் 29 மாநிலங்கள் ஒவ்வொன்றும் தங்கள் தங்கள் பண்பாட்டுக் கல்வியை முன்னெடுப்பதைத் தடுத்து ஒரே வகையான பார்ப்பனிய வேதக்கல்வியை முன்னெடுக்க புதியக்கல்விக் கொள்கை என்கிற ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் ஒரே பாடத்திட்டத்தை வலியுறுத்துகிறது. அதிகாரிகள் இருக்கும் இடத்தில் கார்ப்பரேட்டுகளை நிறுவுகிற வகைக்கு பாஜக முன்னெடுத்துவரும் ஒவ்வொரு சட்டத்தையும் எதிர்த்துக் கொண்டிருப்பது பாஜகவின் தலைமையை அங்கீகரித்து காலம் காலமாக பாஜகவை திருத்துகிற பணியை மாநில ஆட்சிக்கு மட்டுமே மாநிலக்கட்சிகள் தலைமேல் போட்டுக் கொள்வது நிரந்தர அடிமைத்தனமாகும் ஒவ்வொரு மாநிலக் கட்சியும். ஒன்றிய ஆட்சிக்கும் முனைந்து மாநிலக்கட்சிகளின் கூட்டணி ஆட்சியை இந்தியாவில் நிறுவி அட்டவணை எட்டு போன்ற கூட்டாட்சிக்கு உகந்த சட்டங்களை வலுவாக்குவதே இந்தியாவிற்கான நிரந்தரத் தீர்வாக அமைய முடியும். மின்சார சட்டத் திருத்த முன்வரைவு நாடாளுமன்ற மக்களவையில் நேற்று பதிகை செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக இந்தச் சட்ட முன்வரைவு நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நேற்று காலை கூடிய மக்களவையில் எதிர்வரும் ஆண்டுக்கான மின்சார சட்டத் திருத்த சட்டமுன்வரைவை மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் அறிமுகம் செய்தார். பாஜகவின் அடிப்படை திட்ட வரிசையில் மின்சாரத்தையும் தனியார் மயமாக்குவதை அனுமதிப்பது இந்த சட்டமுன்வரைவின் நோக்கமாகும். இந்த சட்டமுன்வரைவு இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டால், தொலைபேசி இணைப்பு மற்றும் இணைய சேவைகளுக்கு ஒரு நிறுவனத்தை தேர்வு செய்வதுபோல் மின்சாரத்துக்கும் ஒரு நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய வேண்டியிருக்கும். மின்சார சட்டத்தின் 14, 42, 62, 146, 152,166 உள்ளிட்ட பிரிவுகளில் திருத்தம் செய்ய இந்த சட்ட முன்வரைவு வகை செய்கிறது. இந்தச் சட்டமுன்வரைவுக்கு ஆர்எஸ்பி உறுப்பினர் பிரேமச்சந்திரன், காங்கிரஸ் உறுப்பினர்கள் மணிஷ் திவாரி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மார்க்சிஸ்ட் உறுப்பினர் எம்.ஏ.ஆரிப், திரிணமூல் உறுப்பினர் சவுகதா ராய், திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தச் சட்டமுன்வரைவு அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என அவர்கள் கூறினர். ஆர்எஸ்பி உறுப்பினர் பிரேமச்சந்திரன் கூறும்போது, 'அரசியல் சட்டத்தின் ஒத்திசைவு பட்டியலில் மின்சாரம் உள்ளது. எனவே சட்டமுன்வரைவை அறிமுகம் செய்யும் முன் மாநில அரசுகளுடன் விரிவான ஆலோசனை செய்வது ஒன்றிய அரசின் கடமையாகும்' என்றார். மணிஷ் திவாரி கூறும்போது, 'ஒரே பகுதியில் மின்சாரம் வழங்க பல தனியார் நிறுவனங்களை இந்த சட்டமுன்வரைவு அனுமதிக்கிறது. இதனால் லாபம் தனியாருக்கும் இழப்பு அரசுகளுக்கும் ஏற்படும். மின்சாரம் கொண்டுதருதலில் அரசின் பங்கை இந்த சட்டமுன்வரைவு குறைக்க முயற்சிக்கிறது' என்றார். 'டெல்லியில் வேளாண்பெருமக்கள் போராட்டம் நடத்தியபோது அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு எதிராக இந்த சட்டமுன்வரைவு பதிகை செய்யப்பட்டுள்ளது' என உறுப்பினர்கள் சவுகதா ராய், எம்.ஏ.ஆரிப் ஆகியோர் குற்றம்சாட்டினர். திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு கூறும்போது, 'தமிழ்நாடு அரசு கடந்த பல ஆண்டுகளாக வேளாண் பெருமக்களுக்கு இலவச மின்சாரம் வழங்குகிறது. இலவச மின்சாரம் பெறும் ஏழை உழவர்களை இந்தச் சட்டத் திருத்தம் பாதிக்கும்' என்றார். நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டமுன்வரைவு அறிமுகம் செய்யப்பட்டவுடன், இந்தச் சட்டமுன்வரைவு ஆபத்தானது என டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறினார். இதுகுறித்து அவர் தனது கீச்சுப் பதிவில், 'மின்சார சட்டத்திருத்த சட்டமுன்வரைவு மக்களவையில் கொண்டுவரப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தானது. இதன் மூலம் நாட்டின் மின்சாரச் சிக்கல்கள் களையப்படுவதற்கு மாற்றாக சிக்கல்கள் மேலும் தீவிரம் அடையும். மக்களின் துன்பம் அதிகரிக்கும். ஒருசில நிறுவனங்கள் மட்டுமே பலன் அடையும். இதை அவசர அவசரமாக கொண்டுவர வேண்டாம் என ஒன்றிய அரசை கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார். பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தனது ஒரு பதிவில், மாநிலங்களின் உரிமைகள் மீது மற்றொரு தாக்குதல். மாநிலங்களை கைப்பாவையாக ஒன்றிய அரசு கருதக் கூடாது. எங்களின் உரிமைக்காக சாலை முதல் நாடாளுமன்றம் வரை போராடுவோம்' என்றார். அதேநேரம், ஒன்றிய மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தனது கீச்சுப் பதிவில், இந்தச் சட்டத்தால் இந்தியா உலகின் வல்லரசாகி விடும் என்கிற அளவிற்கு என்றைக்கும் முளைக்காத போலி வாக்குறுதி விதைகள் நம்பிக்கை ஆக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கவலைகள் தொடர்பாக விரிவான ஆலோசனைக்காக இந்த சட்டமுன்வரைவை நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்புகிறேன் என பேரவைத்தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,335.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.