நள்ளிரவில் விடுதலை பெற்றோம் இன்னும் விடியவே இல்லை. என்று ஒரு பாவலன் பாடினான். விடுதலை பெற்ற இந்தியாவில் மக்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை
என்பதை அந்தப் பாவலன் அப்படித் தெரிவித்தான். இந்தியாவுக்கு
விடுதலை கிடைத்த நள்ளிரவைப் போல, சரக்கு சேவை வரி அறிமுகமாகும் இந்த நள்ளிரவும் தலையாயது
என்று பிரதமர் நரேந்திர மோடி பீற்றியுள்ளார். நாடாளுமன்றத்தில்
நேற்று வௌ;ளிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற சரக்கு சேவை வரி அறிமுக விழாவில் பேசும் போதே
அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பிரதமர்
மேலும் கூறியுள்ளதாவது, ‘நாட்டின் எதிர்கால பாதையை நள்ளிரவில்
முடிவு செய்கிறோம். இது ஒரு கட்சிக்கான வெற்றியல்ல, அரசிற்கான வெற்றியல்ல. (ஹிந்துத்துவா)
நாட்டிற்கான வெற்றி. இது கூட்டாட்சி (க்கு குழி தோண்டும்) தத்துவத்திற்கு சிறந்த உதாரணம்.
தேசிய வளர்ச்சிக்கான திட்டம். பல ஆண்டுகள்
கழித்து, இந்த மைய மண்டபத்தில் மிக முக்கியமான வரலாற்று நிகழ்ச்சி நடக்கிறது. பொருளாதாரம்
தொடர்பான முக்கிய நிகழ்வு இது. நாட்டில் புதிய பரிணமத்தை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்றத்தில்
சரக்கு, சேவை வரி குறித்து பேசியிருக்கிறார்கள். அந்த விவாதங்கள் தான் இந்த சரக்கு,
சேவை வரி சுதந்திர நள்ளிரவை போல இந்த நள்ளிரவும் முக்கியமானதாகிறது. கீதையில் 18 அத்தியாயங்கள்
(18 அத்தியாயங்களும் சூது, வாது, துரோகம்) இருப்பதைப் போன்று 18 கூட்டத்திற்கு பிறகு
இந்த வரி அறிமுகமாகியுள்ளது. முதலில்
மாநிலங்களுக்கு நிறைய சந்தேகம் இருந்தது. தொடர்ந்து ஆலோசிக்கப்பட்ட பிறகு அது களையப்பட்டது
(எதிர்த்த ஒரே தலைவர் செயலலிதா அவர்கள் முடிவா?) சர்தார் படேல் (துப்பாக்கி முனையில்)
500 பகுதிகளை சேர்த்து ஒரு தேசமாக காட்டினார். அதுபோலத் தான் பல வரிகள் ஒன்று சேர்ந்து
சரக்கு, சேவை வரியாக உருவாகி உள்ளது. ஒரே (ஹிந்து) தேசம், ஒரே வரி கனவு நனவானது. ஊழல்,
கறுப்புப் பணத்தை (மாநிலப் பொருளாதாரம்) ஒழிக்கும் இந்த வரி ஒழிக்கும்.’ என்று கூறியுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.