ஒரே நாடு ஒரே வரி என்று சொல்லிவிட்டு பல விகிதங்களைக்
கொண்டுள்ள வரி முறையை அமலுக்குக் கொண்டு வந்துள்ளதால் இந்தச் சரக்குமற்றும்; சேவை வரி
ஒரே நாடு ஒரே வரி தலைப்பிற்கு பொருந்தாது என்று காங்கிரஸ் கட்சியின் முத்த தலைவரும்
முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார். நள்ளிரவு
முதல் அமலுக்கு வந்துள்ள சரக்குமற்றும்; சேவை வரி சட்டம் குறித்து காரைக்குடியில் செய்தியாளர்களிடம்
பேசிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், 2005ம் ஆண்டு முதல் 2012 வரை சரக்குமற்றும்;
சேவை வரி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் முடித்து
வைக்கப்பட்டுவிட்டன. அப்போதே அரசியல் சாசன அவசர சட்டத்தையும் ஐமுகூட்டணி அரசு அறிமுகம்
செய்தது. சரக்குமற்றும்;
சேவை வரியை 2006ம் ஆண்டே அமல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது, அப்போது எதிர்க்கட்சியாக
இருந்த பாஜக அதற்கு முட்டுக்கட்டை போட்டது. அதிலும்
குறிப்பாக குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்கள் மாநில அரசின் வரி விதிக்கும் அதிகாரத்தை நடுவண் அரசு பிடுங்கிக் கொள்வதா? என்;று சரக்குமற்றும்;
சேவை வரிக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால்
இன்று அதே பாஐக தான் நடுவண் அரசில் வீற்றிருப்பதால் இது தனது சாதனை என்று கூறிக் கொள்கிறது.
சரக்குமற்றும்; சேவை வரி என்பது ஒரே வரியை
விதிப்பது தான். இந்த வரி விகிதம் 15 விழுக்காட்டைத் தாண்டக் கூடாது என்றே வலியுறுத்தினோம்.
அதே போன்று பொருளாதார ஆலோசகர்களும் சரக்குமற்றும்; சேவை வரி 15 முதல் 15.5 விழுக்காட்டை
மீறக் கூடாது என்று கூறியிருந்தன. ஆனால்
பாஜக 18 விழுக்காட்டு வரியை விதித்துள்ளது. இது உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது
மிக மிக அதிகம். சரக்குமற்றும்; சேவை வரி என்பது ஒரே வரி முறை என்று கூறி விட்டு 0விழுக்காடு,
5விழுக்காடு, 12 விழுக்காடு, 18 விழுக்காடு, 25விழுக்காடு, 40விழுக்காடு என பல விகிதங்கள்
வைக்கப்பட்டுள்ளன. ஆக ஏற்கனவே இருக்கும் வரியோடு கூடுதல் விகிதங்களாகவே இவை உள்ளன.
அப்படி இருக்கும் போது இது எப்படி ஒரே வரியாக இருக்கும் என்றும் கேள்வி எழுப்பினார். சோதனை
ஓட்டம் செய்து விட்டதாக நடுவண் அரசு கூறுகிறது, நாடு முழுவதும் பல விதமான தொழில்முனைவோர்,
வணிகர்கள் இருக்கும் போது 5 பேரிடம் நடத்திய சோதனை எப்படி அனைவரின் பிரச்னைக்குமான
தீர்வாக அமையும், இவ்வாறு அவர் பேசினார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.