Show all

சுவிஸ் வங்கியில் முதலீடு செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறதாம்

சுவிஸ் வங்கியில் பல ஆயிரம் கோடி பணம் பதுக்கல்!

அதையெல்லாம் வாங்கிக் கொண்டு வந்து இந்தியர்களின் வங்கிக் கணக்கில் தலைக்கு பதினைந்து இலட்சம் போடுவார் மோடி என்று காத்திருந்த-

     இந்தியாவின் ஏழை பாழை உள்ளிட்ட அனைத்து மக்களின் அடுக்ளை, அஞ்சறைப் பெட்டி எல்லாம் துளாவி-

     (ஓர் அரசு வெளியிடும் ரூபாய் தாள் என்பது,

அந்த நாட்டு மக்களின் உழைப்பின் உற்பத்தி, தங்கமாக இருப்பு வைக்கப்பட்டு அதன் மதிப்பு அளவிற்கு ரூபாய் தாளாக வெளியிடப் படுவதாகும்.

     எந்த ஒரு ரூபாய் தாளை வைத்திருப்பவனும் அந்தத் தாளின் மதிப்;;;;பு அளவிற்கு முன்னமேயே உற்பத்தியை ஈட்டி, அரசு பொறுப்;;பேற்றுக் கொண்டு வெளியிட்ட ரூபாய்தாள் என்கிற பொருள் சேவை பெறுவதற்கான அதிகாரத்தை பெற்றவனாகிறான்.

     அரசு, ரூபாய் தாளை யாருக்கும் இலவயமாக அச்சடித்துக் கொடுத்து விடவில்லை. அந்த ரூபாய்தாள் மீது அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது. தான் அச்சடித்துக் கொடுத்த ரூபாய் தாளுக்கு அரசே பொறுப்பு.)

     அப்படிப் பட்ட 500, 1000, ரூபாய்தாள் அதிகாரங்களை செல்லாது என வெற்றுத் தாள்களாக்கிவிட்டு,

     தனிமனித அதிகாரம் என்று ஆதார் அட்டையை மக்கள் கழுத்தில் சங்கிலியாக மாட்டி விட்டு சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்பு பணம் குறைந்து விட்டது.

     இந்திய மக்கள் ஒவ்வொருவரும் தாம் தேசத் துரோகி இல்லை என்பதை நிருபிக்க தனிமனித அதிகாரம் ஆதார் அட்டையை நிரந்தரக் கணக்கு எண்ணுடன் இணைத்து

எப்பாடு பட்டாகிலும் உற்பத்தியில் ஐந்தில் ஒரு பங்கை சரக்கு மற்றும் சேவை வரியாக செலுத்துங்கள். நான் உலகம் முழுவதும் சுற்றிப் பார்த்து வருகிறேன் என்கிறார் மோடி.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.