அரசு பணியில் உள்ள
பெண்ணிற்கும் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும்;, இரு வீட்டார்
சம்மதத்துடன் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது மணமகள்,மணமகன் இடையே நாட்டின் பொருளாதாரம் குறித்து
உரையாடல் நடைபெற்ற போது, மணமகள் நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலைக்கு காரணம் பிரதமர்
மோடி தான் என கடுமையாக விமர்சனம் செய்தார். இதனை ஒப்புக்கொள்ளாத மணமகன் பிரதமர் மோடி
இதற்கு காரணம் இல்லை உலக பொருளாதார மந்தமே இதற்கு காரணம் என தன் வாதத்தை முன் வைத்தார். இதனை ஒப்புக்கொள்ளாத மணமகள் பிரதமர் மோடியை கடுமையாக
விமர்சனம் செய்தாக கூறப்படுகிறது. இதனை அறிந்த உறவினர்கள் அவர்களைச் சமாதானம் படுத்தும்
முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இருவரும் கடைசி வரை சமாதானம் என்ற பேச்சுக்கே வர வில்லை.
முடிவில் இருவரும் திருமணத்தை நிறுத்த சொல்ல, இரு வீட்டாரும் அதிர்ந்து விட்டனர். வேறு
வழியில்லாமல் இரு குடும்பத்தாரும் திருமணத்தை
நிறுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருமணத்தையே நிறுத்திய மோடி ஆட்சி குறித்து உத்தர பிரதேச மக்கள் எள்ளி நகையாடுகின்றனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.