“தேநீர் விற்கும் சிறுவனாக இருந்து,
குஜராத் முதல்வர் பதவி வரை உயர்ந்திருக்கிறேன்”
என்று கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில்
நரேந்திர மோடி உருக்கமாகப் பேசினார். இது போன்ற பேச்சுகள் அவருக்கும், பி.ஜே.பி கட்சிக்கும்
வாக்குகளை அள்ளிக்கொடுத்தன. குஜராத் மாநிலம் வத்நகரில் உள்ள ரயில் நிலையத்தில்தான்
மோடியின் தந்தை தேநீர் கடை வைத்திருந்தார். அவருக்கு உதவியாக மோடியும் அங்கே வேலைபார்த்தார்.
இதைத்தான் தனது தேர்தல் கருத்துப் பரப்புதலில் மோடி குறிப்பிட்டார். மோடி
தேநீர் விற்றதுபற்றி குறிப்பிட்டதிலிருந்து, வத்நகர் உலக அளவில் புகழ்பெற வைத்திட முயற்சிகள்
தொடங்கியது. இப்போது, மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் சார்பில்,
மோடி பிறந்த இடம் உள்ளிட்ட பகுதிகள் சுற்றுலா இடமாக மாற்றப்பட உள்ளது. குறிப்பாக, குஜராத்
மாநிலம் மேக்சானா மாவட்டத்தில் உள்ள வத்நகர் தொடர்வண்டி நிலையத்தில் உள்ள மோடி தேநீர்
விற்ற கடையும் சுற்றுலா இடமாக மாற்றப்படுகிறது. மோடியின்
தேநீர் கடை, பழைமை மாறாமல் பாதுகாக்கப்படும். அதே வேளை, ஒரு நவீனத்துவம் கொடுக்கப்பட்டு,
அது ஒரு சுற்றுலா இடமாகவும் மாற்றப்படும். வத்நகர்
பிரதமர் மோடி பிறந்த இடம் என்பது தவிர, இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமெனவும்
சுட்டிக்காட்ட வத்நகரில் மத்திய தொல்லியல்துறை மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியில், பூமிக்கு
அடியில் ஒரு புத்தமடாலயம் இருந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன என்று மத்திய கலாசாரத்துறை
அமைச்சர் மகேஷ் சர்மா கூறி இருக்கிறார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.