இன்று அகமதாபாத்தில்
செய்தியாளர்களைச் சந்தித்த நடுவண் அமைச்சர் வெங்கையா நாயுடு, ஹிந்தி நமது தேசிய மொழி
என்றும் அதுவே நமது அடையாளம் என்றும் கூறினார். மேலும் ஆங்கில மொழியின் மீது தேவையற்ற
மோகம் உள்ளதாகவும் கூறினார். மேலும் ஆங்கிலம் படித்தால் தான் வேலை கிடைக்கும்
என்பதால் ஆங்கில மொழியின் மீது தேவையற்ற மோகம் நிலவுகிறது. ஹிந்தி மொழியைப் பிரபலப்படுத்த
அரசு ஆலோசனை நடத்த வேண்டும் என கூறினார். வெங்கையா நாயுடுவின் இந்தக் கருத்துக்கு எதிர்க்கட்சி
தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது
குறித்து, காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான சசி தரூர், ஹிந்தி நமது தேசிய மொழி இல்லை
என்றும், இந்தியாவில் உள்ள அதிக மாநிலங்களில் பேசப்படும் மொழி என்றும் ஆனால் ஹிந்தி
மொழியை யார் மேலும் திணிக்க கூடாது எனவும் கீச்சு பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.