பழைய ரூபாய் தாள்களை
மாற்ற கால அவகாசம் கொடுப்பது குறித்து தொடரப்பட்ட வழக்குகளில் நடுவண் அரசும், ரிசர்வ்
வங்கியும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்ச அறங்கூற்று மன்றம் அறிவிப்பு அனுப்பியுள்ளது. கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கை எனவும் பிறகு
பல்வேறு காரணங்களை கூறிக்கொண்டும் கடந்த ஆண்டு நவம்பர் 8 அன்று ரூ.500, ரூ.1000 தாள்கள்
செல்லாது என்று நடுவண் அரசு தடாலடியாக அறிவித்தது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய
ரூபாய் தாள்களை மாற்றிக் கொள்ள கால அவகாசம் கொடுத்தது. அதன்படி அனைத்து வங்கிகள், அஞ்சல் நிலையங்களில்
பழைய ரூபாய் தாள்களை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக புதிய ரூ.2000 ரூபாய் தாள்களை பெற்றுக்
கொள்ளுமாறு அறிவித்தது. இதனால் மக்கள் தங்கள் அன்றாட பணிகளை விட்டு விட்டு மணிக்கணக்கில்
வங்கி வாசல்களே கதி என்று காத்திருந்தனர். அதுவும் முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை
என்பதால் வங்கி திறக்கும் நேரத்துக்கு மிகவும் முன்னதாகவே மக்கள் காத்திருந்தனர். காத்திருப்புகளில்
பல மரணங்களும் கூடஏற்பட்டன. இந்த நிலையில் பழைய ரூபாய் தாள்களை மாற்றிக் கொள்ள
கால அவகாசத்தை கூடுதலாக நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் உச்ச அறங்கூற்று
மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை இன்று விசாரித்த அறங்கூற்றுவர்கள்;,
கால நீட்டிப்பு தொடர்பாக விளக்கம் தர வேண்டும் என்று நடுவண் அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும்
அறிவிப்பு அனுப்பியுள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.