கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு மோடி, பண மதிப்பிழப்பு
என்ற பெயரில் அப்போது நடைமுறையில் இருந்த ரூ.500 மற்றும் 1000 ரூபாய் தாள்களை தடை செய்வதாக
அறிவித்தார். மோடியின்
இந்த அறிவிப்பால் மக்கள் அல்லோகலப்பட்டனர். பணத்தை மாற்றுவதற்கு வங்கிகள் முன்பு நீண்ட
வரிசையில் காத்திருந்து தங்களிடமிருந்த பணத்தை மாற்றினர். முதியவர்கள் வெயிலில் சுருண்டு
விழுந்து இறந்த சம்பவங்கள் நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட
நடவடிக்கையால் கருப்பு பணம் ஒழிந்துவிடும் என்றும், பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்
என்றும் அரசு வேண்டுகோள்களை விடுத்தது. இதனால்
மக்களும் கடும் சிரமங்களுக்கு நடுவே தேச நலன் என்ற சொல்லுக்காக அனைத்தையும் பொறுத்துக்கொண்டு
வரிசையில் காத்திருந்து பணத்தை மாற்றினர். இந்த
நிலையில், டிசம்பர் 10ம் தேதியில் ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதாவது
மொத்த பண மதிப்பிழப்பில் 81 விழுக்காடு ரூபாய்தாள்;கள் தங்களுக்கு திரும்பிவந்துள்ளதாகவும், அதன் மதிப்பு ரூ.12.44
லட்சம் கோடி எனவும் அது கூறியது. அதாவது
மோடி அறிவித்த சுமார் 32 நாட்களில் 81 விழுக்காடு பணம் திரும்ப வந்துவிட்டது என கூறியது
ரிசர்வ் வங்கி ஆனால்,
ரிசர்வ் வங்கி இதுவரை தங்களிடம் திரும்ப வந்த முழு பணத்தின் மதிப்பை அறிவிக்கவில்லை.
ஒரு மாதத்தில் 81 விழுக்காடு பணம் வந்துவிட்டதாக கூறிய ரிசர்வ்வங்கி 200 நாட்கள் கழித்த
பிறகும், எஞ்சிய 19 விழுக்காடு பணத்தின் மதிப்பை கூட்டி மொத்தமாக சொல்லவில்லை. பண மதிப்பிழப்பு
நடவடிக்கையால் கருப்பு பணம் ஒழியவில்லை என்பது அம்பலமாகியுள்ளது. ரிசர்வ் வங்கி இதுவரை
தங்களிடம் வந்த பணத்திற்கான கணக்கு காட்டாமல் இருப்பதே இதை உறுதி செய்யும் வகையில்தான்
உள்ளது. நாடாளுமன்ற குழுவிடமும் ரிசர்வ்வங்கி இப்படித்தான்
பதில் கூறியுள்ளது. ரிசர்வ்
வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் பதில் திருப்திகரமாக இல்லை. கடந்த 7 மாதங்களாகவே பணத்தை
எண்ணுகிறோம் என்றுதான் கூறிவருகிறார். பணத்தை
எண்ண புது இயந்திரங்கள் வாங்கப்பட்டதாகவும் கூறினார். ஆனால், மக்களைச் சிரமப்படுத்திய
மாபெரும் ஒரு நிகழ்வின் முடிவு என்ன என்பது இதுவரை அறிவிக்கப்படாமல் இருப்பது பெரும்
துன்பியல் நகைச்சுவையாகத்தான் இருக்க முடியும். வாடிக்கையாளர்
அடையாள அட்டைகளை எல்லாம் பரிசோதித்துதான் செல்லாது என அறிவிக்கப்பட்ட பணத்தை பெற்றன
வங்கிகள். இந்தப் பணம் எப்படி வந்தது என்றெல்லாம் கேட்டனர். பணமதிப்பிழப்பு நேரத்தில்
கட்டுப்பாடு விதிக்கப்பட்டதெல்லாம் நடுத்தர மக்களுக்குதாம். கருப்பு பணம் புழக்கத்தில்
வந்துகொண்டுதான் இருந்தது என்பதுதான் உண்மை. கருப்பு
பண முதலைகள் பழைய கருப்பு பணத்தை கொடுத்துவிட்டு, புதிய ரூபாய் தாள்களை தாராளமாகப் பெற்றுள்ளனர். எனவேதான், ரிசர்வ் வங்கிக்கு அதிக
அளவு ரூபாய்தாள்கள் வந்து சேர்ந்துள்ளன. எனவே இதுவரை எண்ணி முடித்தாக காட்ட முடியவில்லை. ரிசர்வ்வங்கி
கருப்பு பணம் உள்ளே வந்துவிட்டதை உணர்ந்துகொண்டு, அதை சொல்லவும் முடியாமல் விழித்துக்கொண்டுள்ளது.
வரும்
ஆகஸ்ட் மாதத்தில் ஆண்டு கணக்கை ரிசர்வ் வங்கி வெளியிடுவது வழக்கம். அப்போதாவது உண்மை
வருகிறதா, அல்லது ஏதாவது காரணம் சொல்லப்போகிறதா என்பதை பார்க்கலாம். எப்படியிருந்தாலும்
அடுத்து இந்தியாவிற்கு வரபோவது மாநிலக் கட்சிகளின் கூட்டணி ஆட்சிதான் என்பதில் மக்கள்
உறுதியாக இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் வாழ்நாள் கைதிகளாக மாட்டாமலா இருக்கப் போகிறார்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.