நடுவண் அரசின் ஒவ்வொரு துறைகளிலும் உள்ள அதிகாரிகள்
ஊழலில் ஈடுபடுவதை அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும். சமீபத்தில்
39 ஆட்சிப்;பணித் துறை அதிகாரிகள் ஊழல் புகாரில் சிக்கினார்கள். அவர்கள் மீது விசாரணை
நடந்து வருகிறது. இதில் 29 பேர் நடுவண் அரசின் பல்வேறு துறைகளில் செயலாளர் தகுதியில்
இருக்கும் அதிகாரிகள் ஆவார்கள். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இது
தவிர சில மூத்த அதிகாரிகள் உள்பட 68 அதிகாரிகள் மீதும் ஏராளமான புகார்கள் வந்ததுள்ளன.
அவர்கள் மீதும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த
நிலையில் ஊழல் புகாரில் சிக்கி வழக்கை சந்தித்து வரும் அதிகாரிகளின் பட்டியலை வெளியிட
வேண்டும் என்று நடுவண் அரசுக்கு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நடுவண்
தகவல் ஆணையம் ஒவ்வொரு துறையிலும் ஊழல் வழக்குகளை எதிர்க்கொண்டுவரும் அதிகாரிகளின் முழு
விபரங்களையும் பொதுதளத்தில் வெளியிட அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது. பணியாளர்கள்
மற்றும் பயிற்சி துறைக்கு உத்தரவிட்டு உள்ள நடுவண் தகவல் ஆணையம், ஊழல் வழக்குகளை எதிர்க்கொண்டு
உள்ள அதிகாரிகளின் எண்ணியல் சார்ந்த விபரங்களை வெளியிட உத்தரவிட்டு உள்ளது. மோடி
முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் 100 விழுக்காடும் அதிகாரிகளைச் சார்ந்தே இருக்கிறது.
அதிகாரிகள் நினைத்தால் ஒரே இரவில் இந்தியாவை விற்று விட முடியும். அந்த அளவிற்கு மோடி
இந்தியாவைக் கட்டுமானம் செய்து கொண்டிருக்கிறாh;. அதிகாரிகள் கவனமாக கண்காணிக்கப் பட
வேண்டும். ஆனாலும்
மோடியின் நடவடிக்கைகள் அடிப்படையில் அதிகாரிகள் கண்காணிக்கப் படவேண்டும் என்பது சரி
அவ்வளவுதான். ஓவ்வொரு
தனிமனிதனுக்கும் தனது கமுக்கத் தன்மை பேணுவதற்கு உரிமை உண்டு. ஒவ்வொரு
தனிமனிதனையும் கண்காணித்தல் அதற்கு அதிகாரிகள்; அவர்களையும் கண்காணித்தல் என்று தொடர்ச்சியாகப்
போய்க் கொண்டே யிருக்க வேண்டியதுதான். சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை என்பது திருக்குறள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.