Show all

பேரறிமுகக் குடும்பத்தில் இயல்புக்கு மாறான இறப்பு! பரபரப்பில் ஆந்திர மாநிலம்

ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் இளைய மகள் உமா மகேஸ்வரி ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆந்திராவில் பேரறிமுகமான குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

17,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவ் மகள் உமா மகேஸ்வரி தற்கொலை செய்துகொண்டது ஆந்திர மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் நீண்ட காலம் நோயால் அவதிப்பட்டு வந்ததாகவும், மன அழுத்தத்தில் இருந்ததாகவும்; தகவல் தெரிவிக்கப்படுகிறது.

ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் இளைய மகள் உமா மகேஸ்வரி ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆந்திராவில் பேரறிமுகமான குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

தெலுங்கு திரையுலகின் பேரறிமுக நடிகராகவும், ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசத்தின் முதலமைச்சராகவும் இருந்தவர் என்.டி.ராமாராவ். என்.டி.ஆருக்கு 12 குழந்தைகள் உள்ளனர். அவர்களில் இளையவரான உமா மகேஸ்வரிதனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

நீண்ட நேரமாக படுக்கை அறையில் இருந்து உமா மகேஸ்வரி வெளியே வராததால் ஐயம் அடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து பார்த்த போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். தகவல் அறிந்து சோகநிகழ்வு இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மின்விசிறியில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்த அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நீண்ட கால நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, அவரது மகன் நாரா லோகேஷ் மற்றும் உறவினர்கள் மகேஸ்வரியின் இல்லத்திற்கு விரைந்தனர்.

உயிரிழந்த உமா மகேஸ்வரி, சந்திரபாபு நாயுடுவின் மனைவி, நாரா புவனேஸ்வரி மற்றும் முன்னாள் ஒன்றிய அமைச்சர் டக்குபதி புரந்தேஸ்வரி ஆகியோரின் உடன்பிறந்தவர் ஆவார். என்.டி.ராமாராவுக்கு எட்டு மகன்களும் நான்கு மகள்களும் இருந்தனர். நான்கு மகள்களில் மகேஸ்வரி இளையவர் ஆவார். ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் மிகவும் புகழ்பெற்ற ஒரு குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,328.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.