இந்தியாவின் சிலவேறு ஆளுநர்கள் நியமனம் மற்றும் மாற்றத்தை முன்னெடுத்துள்ளது ஒன்றிய அரசு. அந்த வகையில், தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 25,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாகாலாந்து ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவியை தமிழ்நாட்டின் ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். காவல் ஆட்சிப்பணி அதிகாரியான ரவி, இந்திய உளவுத்துறையான ஐ.பி சிறப்பு இயக்குநராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில் அவர் பஞ்சாப் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இது தவிர ஓய்வு பெற்ற படைத்துறை லெப்டினன்ட் ஜெனரல் குர்மித் சிங் உத்தராகண்ட் மாநில ஆளுநராக குடியரசு தலைவர் நியமித்துள்ளார். உத்தராகண்ட் மாநில ஆளுநராக இருந்த பேபி ராணி மௌரியா அண்மையில் தனது பதவியில் இருந்து விலகியது குறிப்பிடதக்கது. . அசாம் மாநில ஆளுநராக உள்ள ஜக்தீஷ் முகி, நாகாலாந்து மாநில ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்றும் குடியரசுத் தலைவர் தமது உத்தரவில் கூறியுள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,002.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.