டெல்லி காப்பகங்களில் வசிக்கும் 6 முதல் 18 அகவைக்கு உட்பட்ட 400 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 45 விழுக்காட்டு பேர்களுக்கு இரட்டை இலக்க எண் எது என்றும், 25 விழுக்காட்டு பேர்களுக்கு எண்களே தெரியவில்லை என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 29,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: டெல்லி காப்பகங்களில் வசிக்கும் குழந்தைகளில் 45 விழுக்காட்டு பேர்களுக்கு இரட்டை இலக்க எண் எது என்றும், 25 விழுக்காட்டு பேர்களுக்கு எண்களே தெரியவில்லை என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் கணக்கெடுப்பு தெற்கு மற்றும் தென்கிழக்கு மாவட்டங்களின் 30 குழந்தைகள் இல்லங்களில் நடத்தப்பட்டது. 6 முதல் 18 அகவைக்கு உட்பட்ட 400 குழந்தைகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. டெல்லி குழந்தைகள் உரிமை ஆணையம் மற்றும் குழந்தைகள் நல அமைப்புகள் சேர்ந்து கொரோனா காலகட்டத்தில் இது தொடர்பான ஆய்வை நடத்தியுள்ளன. இதில் 100 குழந்தைகள் டெல்லியில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் படிப்பவர்கள், மூன்றில் ஒருங்கு தென், தென்கிழக்கு டெல்லியில் படிப்பவர்கள். குழந்தைகளின் அடிப்படைக் கல்வியை பலப்படுத்துதல் மற்றும் கணிதத்திறமையை மேம்படுத்துவதற்கே இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 37.5 விழுக்காட்டு குழந்தைகளுக்கு சரிவர ஹிந்தி படிக்க தெரியவில்லை என்பதும் 18 விழுக்காட்டுக் குழந்தைகளுக்கு ஹிந்தி எழுத்துக்களைக் கூட அடையாளம் காண முடியவில்லை என்ற அதிர்ச்சி தகவலும் ஆய்வில் கிடைத்துள்ளன. இந்த ஆய்வு தொடர்பாக டெல்லி குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் அனுராக் குந்து கூறியதாவது:- கொரோனா காலத்தில் குழந்தைகளின் கல்வி குறித்து தென், தென்கிழக்கு டெல்லியில் உள்ள காப்பகங்களில் ஆய்வு நடத்தினோம். இந்த ஆய்வின் மூலம் கல்வியில் பின்தங்கியுள்ள குழந்தைகளுக்கு அதற்கான பயிற்சியைத் தொடங்கிவிட்டோம் என்று கூறினார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.