சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும்
சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது இந்த தண்டனைக்கு எதிராக சசிகலா,
இளவரசி, மற்றும் சுதாகரன் ஆகியோரும் உச்சஅறங்கூற்று மன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல்
செய்துள்ளனர். மறுசீராய்வு மனு உச்சஅறங்கூற்று மன்றத்தில் 6அன்று விசாரணைக்கு வர உள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது. 90 நாட்களில்
சீராய்வு மனு தாக்கல் செய்யலாம் என்ற அடிப்படையில் இந்த மனுவை சசிகலா வழக்கறிஞர் செந்தில்
தாக்கல் செய்துள்ளார். அதில் வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டது
போன்று தமக்கும் விலக்கு அளிக்க வேண்டும் என சசிகலா கோரியுள்ளார். உச்சஅறங்கூற்று
மன்ற அறங்கூற்றுவர்கள் பினாகி சந்திர கோஷ், அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வுதான்,
சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்துத் தீர்ப்பளித்தது. இதே அமர்வுதான், மறுசீராய்வு
மனுவையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், இந்த இரண்டு அறங்கூற்றுவர்களில்
ஒருவரான பினாகி சந்திர கோஷ் கடந்த மே 27ஆம் தேதி ஓய்வுபெற்று விட்டதால் இந்த அமர்வுக்கு
வேறொரு அறங்கூற்றுவர் நியமிக்க வேண்டும். புதிய
அறங்கூற்றுவர் யார் என்பதை உச்ச நீதிமன்றத்தின் தலைமை அறங்கூற்றுவர் ஜே.எஸ்.கெஹர் இன்னும்
முடிவு செய்யவில்லையாம். அது முடிவு செய்யப்பட்டதும், மறுசீராய்வு மனு விசாரணைக்கு
வரும் என்று தெரிவிக்கப்பட்டது. அநேகமாக
மறுசீராய்வு மனு உச்ச அறங்கூற்று மன்றத்தில் 6அன்று விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலாவின்
மொத்த நம்பிக்கையும் மறுசீராய்வு மனு விசாரணையை நம்பித்தான் உள்ளது. கர்நாடகா உயர்அறங்கூற்று
மன்றத்தில் செயலலிதாவிற்கு விடுதலை கிடைத்தது போல, தனக்கும் மறுசீராய்வு மனு விசாரணை
கை கொடுக்கும் என்று நம்புகிறார் சசிகலா. விடுதலையாகி வந்த பின்னர் கட்சியையும், ஆட்சியையும்
தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடலாம் என்றும் நம்புகிறார் நடக்குமா? காலம்தான்
பதில் சொல்ல வேண்டும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.