வங்கிகளில் இருந்து
ரூ.2 லட்சம் அல்லது அதற்கு அதிகமான தொகையை ரொக்கமாக பெறுவோருக்கு 100 விழுக்காடு தொகை
அபராதமாக விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பழைய ரூ.500, ரூ.1000 தாள்கள் செல்லாது என்று
நடுவண் அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி அறிவித்தது. இதையடுத்து பழைய ரூ.500, ரூ.1000 தாள்களை வங்கிகள்
மூலம் திரும்ப பெறப்பட்டு அதற்கு பதில் புதிய ரூ.2000 தாள்கள் பொதுமக்கள் புழக்கத்துக்கு
வினியோகிக்கப்பட்டன. இதனால் நாடு முழுவதும் மக்கள் வங்கிகளில் காத்துக்
கிடந்து கடுமையாக அவதிப்பட்டனர். சிலர் மரணம்; கூட அடைந்தனர். பல மாதங்களுக்கு பின்பு
நிலைமை சீரானது. அதைத் தொடர்ந்து வங்கிகளில் பணம் எடுக்கவும், பணம் போடவும் நடுவண்
அரசின் நிதி அமைச்சகம் கடும் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. மேலும் வங்கிகளில் பணம் போடப்படுவது மற்றும் எடுப்பது
போன்ற பணபரிவர்த்தனைகளை வருமானவரித்துறை கண்காணித்து வருகிறது. அதைத் தொடர்ந்து 2017-ம் ஆண்டு நிதி சட்டத்தின்
மூலம் ரூ.2 லட்சம் அல்லது அதற்கு அதிகமான தொகையை ரொக்கமாக பரிவர்த்தனை செய்வதற்கு நடுவண்;
அரசு தடைவிதித்துள்ளது. இந்தத் தடை நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல்
அமலுக்கு வந்துள்ளது. அதன்படி வருமானவரிச் சட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்டு
இருக்கும் 269-எஸ்.டி. பிரிவில் ஒரே நாளில் மேற்கண்ட தொகையை ஒரே பரிவர்த்தனையாகவோ அல்லது
ஒரு நிகழ்ச்சி தொடர்பான பரிவர்த்தனைக்கோ அல்லது தனிநபருக்கு அளிப்பதற்கோ தடைவிதித்துள்ளது. எனவே ரூ.2 லட்சம் அல்லது அதற்கு அதிகமான தொகையை
ரொக்கமாக பெறுவோருக்கு 100 விழுக்காடு தொகை அபராதமாக விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை
எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வருமானவரித்துறை சார்பில் அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: வருமான வரிச்சட்டத்தின்
269-எஸ்.டி. பிரிவை மீறுவோருக்கு, அவர் எவ்வளவு தொகையை ரொக்கமாக பெறுகிறாரோ, அதே தொகை
அபராதமாக விதிக்கப்படும். அதே நேரத்தில் அரசு, நிதி நிறுவனம், தபால் நிலைய
சேமிப்புக் கணக்கு அல்லது கூட்டுறவு வங்கி ஆகியவற்றிடம் இருந்து பெறப்படும் தொகைக்கு
இதிலிருந்து விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று ரூ.2 லட்சம் அல்லது அதை விட அதிக தொகையை
ரொக்கமாக யாரேனும் பெறுவது குறித்து பொதுமக்கள் யாருக்கேனும் தகவல் தெரிந்தால், அவர்கள்
வருமான வரித்துறைக்கு மின்னஞ்சல் முகவரி மூலம் உளவுசொல்லும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் முயற்சியில் யாரேனும்
ஈடுபட்டாலும், அது குறித்தும் மேற்கண்ட முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பி உளவுசொல்லும்
படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு வருமானவரித்துறை
குறிப்பிட்டுள்ளது. பாராளுமன்றத்தில் நடுவண் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி
2017-18-ஆம் ஆண்டு வரவு-செலவு தாக்கல் செய்யும் போது ரூ.3 லட்சத்துக்கும் அதிக தொகையை
ரொக்கமாக பரிவர்த்தனைக்கு தடைவிதிக்கப்படுவதாக அறிவித்திருந்தார். எனினும் ரூ.3 லட்சம்
என்ற உச்சவரம்பு ரூ.2 லட்சமாக பின்னர் குறைக்கப்பட்டது. வருமான வரித்துறையின்
புதிய அறிவிப்பு பற்றி வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது: வங்கியில் ரொக்கமாக
பணத்தை எடுக்கும்போது அதை நாங்கள் எதுவும் செய்யப்போவதில்லை. ரூ.2 லட்சத்துக்கு மேல்
ரொக்க பரிவர்த்தனை செய்யப்பட்டால் அபராதம் என்பது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள
சட்டம். ஒரு நாளில் ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பரிவர்த்தனை
செய்தால் வருமான வரித்துறை கண்காணிக்கும். இது பற்றி சம்பந்தப்பட்டவர்களுக்கு வருமானவரித்
துறை விளக்கம் கேட்டு எச்சரிக்கை-அறிக்கை அனுப்பும். சரியான விளக்கம் அளிக்கவில்லை
என்றால் 100 விழுக்காடு அபராதம் விதிக்கும். முகமதுபின் துக்ளக் ஆட்சியை பிரதமர் மோடி நினைவுபடுத்துவதாக
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம்
யெச்சூரி தெரிவித்தார். திருநெல்வேலியில்
3 நாட்கள் நடைபெறும் அக்கட்சியின் மாநில சிறப்பு மாநாட்டை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:
இந்திய பொருளாதாரம் தொடர்ந்து தேக்க நிலையில் இருக்கிறது. கடந்த 28
மாதங்களாக ஏற்றுமதி முடங்கி இருக்கிறது. அனைத்து தொழில்களும், விவசாயமும்
நெருக்கடியில் உள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் விவசாயிகள் தற்கொலை 26 விழுக்காடு
அதிகரித்து இருக்கிறது. நாட்டின் பொருளாதாரம் 90 விழுக்காடு பணப்
பரிமாற்றம் தொடர்பாக இருக்கிறது. இணையதளம் மூலம் பணப் பரிமாற்றம் என்பது 5 விழுக்காடுக்கும்
குறைவு. தற்போது 500, 1,000 ரூபாய் தாள்கள் செல்லாது
என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொருட்களை வாங்க சில்லறை இல்லை. வங்கிகளிலும்,
ஏடிஎம்களிலும் மக்கள் காத்திருக்கின்றனர். இந்தியாவில் 3-ல் 2 பேருக்கு வங்கிகளில்
கணக்கு இல்லை. 90 விழுக்காடு பேருக்கு சேமிப்புகள் இல்லை. கறுப்பு பணம் வெளிநாட்டு வங்கிகளிலும்,
வெளிநாட்டு பணமாகவும் உள்ளது. தீவிரவாதிகள் ரூபாய் நோட்டுகளாக பணப் பரிமாற்றத்தை
செய்யவில்லை. ஆன்லைன் மூலம் பணப் பரிமாற்றம் செய்கின்றனர். அரசியல், நிர்வாக
ரீதியாக லஞ்ச, ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஊழலை ஒழிக்க முடியாது.
தற்போது ரூ.2,000 தாள்கள் அறிமுகம் செய்துள்ளதால் ஊழல் 2 மடங்கு அதிகமாகும்.
இதையெல்லாம் பார்க்கும்போது மோடியின் ஆட்சி முகமதுபின் துக்ளக் ஆட்சியை
நினைவுபடுத்துகிறது. ஒரே ஒரு
சொத்துக்; குவிப்பு வழக்கை வைத்து, அதன் தலைவி உட்பட ஒரு கட்சியையே நிர்மூலமாக்கிய
திமுகவைப் போல பாஜகவிற்கு ஒரு எதிரி இல்லாமல் போனது இந்திய மக்களின் தலைவிதி.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.