10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் 2ஜி சேவையை நிறுத்த முடிவெடுத்திருக்கிறது. வரும் நவம்பர் 30-ம் தேதி முதல் 2 ஜி சேவை தொடராது. நிறுவனத்தில் உள்ள 4 கோடி வாடிக்கையாளர்களும், தங்கள் வசம் இருக்கும் ஸ்மார்ட்போனை அடிப்படையாக வைத்து 3ஜி மற்றும் 4 ஜி சேவைக்கு மாற்றப்படுவார்கள் என நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மேலும் இந்த துறையில் போட்டி அதிகரித்துவிட்டது என்றும் ஆர்.காம் தெரிவித்திருக்கிறது. சர்வதேச வாய்ஸ் சேவைகள், மொபைல் டவர் பிரிவு ஆகியவை தொடரும் என்றும் நிறுவனம் அறிவித்திருக்கிறது. ஆர்.காம் நிறுவனத்துக்கு ரூ.46,000 கோடி கடன் இருந்தது. இந்த நிலையில் ஆர்.காம் மற்றும் ஏர்செல் ஆகிய நிறுவனங்கள் இணைப்பு சட்ட சிக்கல் காரணமாக தடைப்பட்டது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் ஆர்.காம் பங்கு 2.95விழுக்காடு சரிந்து முடிந்தது. -பிடிஐ
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.