தமிழகத்தில் நடந்த
சல்லிக்கட்டு போட்டியில் வீதிமீறல் நடந்ததாக கூறி சல்லிக்கட்டு போட்டியை தடை செய்ய
கோரி உச்ச அறங்கூற்று மன்றத்தில் பீட்டா மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளது,. தமிழர்களின் வீரவிளையாட்டான சல்லிக்கட்டில் மிருகவதை
இருப்பதாக பிட்டா உள்ளிட்ட அமைப்புகள் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து சல்லிக்கட்டுப்போட்டிக்கு
அறங்கூற்றுமன்றம் தடை விதித்ததால் சில ஆண்டுகளுக்கு தமிழகத்தில் சல்லிக்கட்டு நடத்த
முடியாத சூழ்நிலை நிலவியது. இந்நிலையில் கடந்த ஆண்டு சனவரி மாதம் தமிழகத்தில்
உள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் சல்லிக்கட்டு கோரி போராட்டத்தில் இறங்கினர். தலையாய
இடங்களாக சென்னை மெரினா, மதுரை தமுக்கம், அலங்காநல்லூர், உள்ளிட்ட பகுதிகளில் மற்றும்
தமிழகம் முழுவதும் ஆங்காங்கே வரலாறு காணாத வகையில் உலகையே திரும்பி பார்க்க வைக்கும்
வகையில் போராட்டம் நடத்தப்பட்டன. இதன் எதிரொலியாக தமிழக சட்டமன்றத்தில் மிருகவதை
தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு சல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது.
இதை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சல்லிக்கட்டு, மாட்டு வண்டி பந்தயம்
உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது பீட்டா அமைப்பு சார்பில்
சல்லிக்கட்டைத் தடை செய்ய கோரி உச்ச அறங்கூற்று மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவில், தமிழகத்தில் நடந்த சல்லிக்கட்டில்
விதிமீறல் நடந்தது. தமிழக அரசின் மிருக வதை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்
என தெரிவித்துள்ளனர். இது தற்போது தமிழக
இளைஞர்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழக வீரவிளையாட்டு கழகத்தை சேர்ந்த
ராஜேஷ் இப்பிரச்னையை சட்டரீதியாக சந்திப்போம் என தெரிவித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.