தமிழ் மற்றும் புதிய குடியரசு தலைவரின் தாய்மொழியான சந்தாளி உள்ளிட்ட இருபத்தி இரண்டு மொழிகளை இந்தியாவின் ஆட்சி மொழிகளாகக் கொண்டாடுகிற அட்டவணை எட்டை- தான் சார்ந்த சந்தாளி மொழி அதிகாரத்திற்காக தூக்கிப் பிடிக்க வேண்டுமே என்று மொழிஅடிப்படை கொள்கைபாட்டாளர்கள், புதிய குடியரசு தலைவர் புதி அவர்களின் செம்பணியை எதிர் நோக்கி நிற்கின்றனர். 11,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: சமூகநீதிக்கு நிற்பாரா புதிய குடியரசு தலைவர் புதி! சமூகநீதிக்கு ஆதரவான கட்சிகள் விவாதத்தில் இறங்கியுள்ளன, கௌரவர் பாண்டவர் கதையின் மீதான மீள்ஆய்வோடு. ஒடிசா மாநிலத்தை சேந்த புதிய குடியரசு தலைவர் புதி, அவர் சார்ந்துள்ள பழங்குடியினத்திற்கு நிற்க வேண்டுமே என்று ஒப்பரவு (சமூகநீதி) கொள்கைப்பாட்டாளர்களும், தமிழ் மற்றும் புதிய குடியரசு தலைவரின் தாய்மொழியான சந்தாளி உள்ளிட்ட இருபத்தி இரண்டு மொழிகளை இந்தியாவின் ஆட்சி மொழிகளாகக் கொண்டாடுகிற அட்டவணை எட்டை- தான் சார்ந்த சந்தாளி மொழி அதிகாரத்திற்காக தூக்கிப் பிடிக்க வேண்டுமே என்று மொழிஅடிப்படை கொள்கைபாட்டாளர்களும், அந்தந்த வகைமைகளுக்கு புதிய குடியரசு தலைவர் புதி அவர்களின் செம்பணியை எதிர் நோக்கி நிற்கின்றனர். புதிய குடியரசு தலைவர் புதியை குடியரசு தலைவர் வேட்பாளராக பாஜக முன்னிறுத்தியபோதே, பலரும் இதை பற்றி கருத்து சொல்லியிருந்தனர். அனால், புதிய குடியரசு தலைவர் புதியை தலைவராக்குவதன் மூலம் அடுத்து வரும் ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில், நாற்காலியை பிடித்து விடலாம் என்பதே பாஜகவின் திட்டமாக உள்ளதாக அரசியல் கணக்கு தெரிவிக்கிறது சமூக ஆர்வலர் மேதா பட்கர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஆதிவாதிகள் மற்றும் தலித்துக்களின் நலன்களை பாதுகாக்க, குடியரசு தலைவருக்கு மட்டுமல்ல, ஆளுநருக்கும் அரசியல் அமைப்பில் உரிமை உண்டு. இந்த சமூகத்தினருக்கு எதிரான எந்த சட்டத்தையும் அவர் பயன்படுத்துவதை தடுக்க முடியும். ஆனால் புதி தேர்ந்தெடுக்கப்பட்டால், அவரால் முடிந்ததை உடனே செய்துவிட முடியுமா? குடியரசு தலைவர் ஆளும் கட்சியின் ரப்பர் முத்திரையாக மாறுகிறார் என்றே இதன் பொருள். சொந்த கிராமத்தில் மின்சாரம் கிடைக்காத புதிக்கு என்ன அதிகாரம் இருக்கும் என்று தெரியவில்லை? என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதேபோல, திருமாவளவனும் ஒருமுறை இதுகுறித்து கருத்து சொல்லி இருந்தார். பாஜகவில் இருக்கும் தலித்துகளான எல்.முருகனும், புதியும் பாகன் கையில் இருக்கும் கோயில் யானைகள், சோதிடரிடம் உள்ள கூண்டுக்கிளிகள், வித்தைக்கூடாரப் புலிகள் போன்றுதான் செயல்பட முடியும். என்று வெளிப்படையாகவே கூறியிருந்தார். இந்நிலையில்தான், நேற்று புதி குடியரசு தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இவருக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்ததைப் போலவே, திருமாவளவனும் வாழ்த்து தெரிவித்திருந்தார். கீச்சுவில், 'இந்திய முதல் குடிமகவாக உயர்ந்துள்ள குடியரசு தலைவர் புதி அவர்களுக்கு எமது வாழ்த்துகள். கௌரவர் பாண்டவர் கதையில் நாட்டைச் சூதாட்டத்தில் விட்டவர்கள் திரௌபதியையும் விட்டார்கள். நவ பாரதத்தில் நாட்டைக் கார்ப்பரேட்டுகளிடம் விற்பவர்கள் மகா பாரத பாண்டவர்களின் வாரிசுகளாம். ஏமாறக் கூடாது நவ திரௌபதி' வாழ்த்து பதிவிட்டிருந்தார் திருமாவளவன்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,322.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.