Show all

‘சிகிச்சை வெற்றி’ என்று கீச்சு போட்டு எச்.இராஜா கொண்டாட்டம்! பட்டிமன்றப் பேச்சாளர் நெல்லை கண்ணன் கைது காரணமாம்

சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற முழக்கப் போராட்டத்தில் கலந்துகொண்ட தாமரை சொந்தங்கள், ஹிந்து இயக்க சகோதரர்கள் அனைவருக்கும் தமிழக பாஜக சார்பில் நன்றி கலந்த வாழ்த்துக்களை உவகையோடு உரித்தாக்குகிறேன் தேசமும், தமிழகமும் காக்க நம் தர்ம போராட்டம் தொடரும்! பாரத் மாதா கீ ஜெய்! இவ்வாறு எச்.இராஜா கீச்சு வெளியிட்டுள்ளார். பாவம் பரிதாபத்திற்குரிய பட்டிமன்றப் பேச்சாளர் நெல்லைக் கண்ணன் கைதைத் தொடர்ந்து.

17,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ‘சிகிச்சை வெற்றி’ என்று கீச்சுப் போட்டு, நெல்லை கண்ணன் கைதான விவகாரத்தை கொண்டாடியுள்ளார்  பாஜக தேசிய பொதுச் செயலாளர்களில் ஒருவரான எச்.இராஜா. மோடி மற்றும் அமித்சா பற்றிய நெல்லை கண்ணன் பேச்சுக்கு, அவரைக் கைது செய்ய வேண்டும் என்று தொடர்ந்து போராடி வந்தவர் எச்.இராஜா  
சென்னைக்கடற்கரையில் இன்று, இராஜா தலைமையில், பாஜக மூத்த தலைவர்கள், கொஞ்சம் பேருடன், முழக்கப் போராட்டம் நடத்தி, நெல்லை கண்ணன் கைதுக்கு வலியுறுத்தினர். இந்த நிலையில், இன்று இரவு சுமார் 9 மணியளவில், நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்ட தகவல் ஊடகங்களுக்கு கிடைத்தது. 

அமித்சா பற்றிய சர்ச்சை பேச்சு, பெரம்பலூர் அருகே நெல்லை கண்ணன் அதிரடியாக கைது என்ற செய்திக்குப் பிறகு, எச்.இராஜா வெளியிட்ட கீச்சில், நன்றி! நன்றி! நன்றி! தலைமைஅமைச்சர் திரு.நரேந்திர மோடி அவர்களையும், உள்துறை அமைச்சர் திரு.அமித்சா அவர்களையும் கொலை செய்யத் தூண்டும் வகையில் பேசிய நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி, காவல் நிலையங்களில் நேரடியாகவும், இயங்கலை மூலமாகவும் புகார் கொடுத்த பாஜக நிர்வாகிகள், ஹிந்து இயக்க சகோதரர்கள், மேலும் இன்று மாலை சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற முழக்கப் போராட்டத்தில் கலந்துகொண்ட தாமரை சொந்தங்கள், ஹிந்து இயக்க சகோதரர்கள் அனைவருக்கும் தமிழக பாஜக சார்பில் நன்றி கலந்த வாழ்த்துக்களை உவகையோடு உரித்தாக்குகிறேன் தேசமும், தமிழகமும் காக்க நம் தர்ம போராட்டம் தொடரும்! பாரத் மாதா கீ ஜெய்! இவ்வாறு எச்.இராஜா கூறியிருந்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,384.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.