பழைய தங்க நகை விற்பனை செய்தால் அதன் மூலம் கிடைக்கும்
தொகைக்கு, 3விழுக்காடு சரக்கு மற்றும் சேவை வரி செலுத்த வேண்டும். பழைய
நகையை விற்று, புதிய நகையை வாங்குவது என்றால், செலுத்தபட்ட 3விழுக்காடு சரக்கு மற்றும்
சேவை வரியைக் கழித்து கொள்ளலாம். ஒருவரிடம்
இருந்து நகை கடை வைத்து இருப்பவர் பழைய நகையை வாங்கினால், 3விழுக்காடு சரக்கு மற்றும்
சேவை வரியை வசூலிக்க வேண்டும். ஒரு
லட்சம் ரூபாய்க்கு ஒருவரிடம் இருந்து பழைய நகையை நகை கடைக்காரர் வாங்கினால், 3,000
ரூபாயை கழித்து கொண்டு தான் மீதி தொகையை வழங்க வேண்டும். பழைய
நகையை கொடுத்து அதில் மாற்றம் செய்து தரும்படி கேட்டால், அது வேலை என கருதப்பட்டு,
5விழுக்காடு சரக்கு மற்றும் சேவை வரி வசூலிக்கப்படும். இவ்வாறு மத்திய வருவாய் செயலாளர் ஹஸ்முக் அதியா
கூறிகிறார். கிழிந்தது
கிருட்டிணகிரி என்று அங்கலாய்கிறார்கள் மக்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.