Show all

இந்தியாவின் அலுவல் மொழிகள்

இந்தியா என்பது தமிழர் வரலாற்று அடிப்படையான சொல். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு- எந்த அயல் இயல்களும் இந்தியாவில் நுழைவதற்கு முன்னம், தமிழர்களே இந்தியாவின் ஒட்டுமொத்த நாகரிக மாந்தராக விளங்கி வந்தனர்.

     இந்தியா என்பது பாரதம் என்ற பெயரிலோ இந்தியா என்ற பெயரிலோ அதுவரை யாராலும் அழைக்கப்பட்டிருக்கவில்லை.

குமரிக் கண்டம் முதல் இமயம் வரை தமிழர் தாராளமாக தாம் புழங்கி வந்த பகுதியை நாவலந்தேயம் என்று அழைத்தனர்.

     அது உலகம் முழுவதும் தமிழருக்கு வணிகத் தொடர்பு இருந்த காலம்.

     உலகம்- தமிழர் இருப்பிடத்தை அறிய ஆர்வம் கொண்டிருந்த காலம்.

     உலகினர் தமிழர் நாகரிகக் கூறுகளில் மலைத்திருந்த காலம்.

     இந்தியா குறித்து ‘நாவலந்தேயம்’ என்ற அறிமுகம் மட்டுமே இருந்தது.

அதைத்தான் உலகினர், ந்தேயம் -ந்தேயா - India என்று பதிவு செய்தனர்.

     ஹிந்தி ஹிந்து பாரத் என்பன பார்ப்பனியர்கள் இந்தியாவை தமது நாடாக அறிவித்துக் கொள்ள முன்னெடுக்கும் சொற்கள்.

     பார்ப்பனியர்கள் இந்தியா என்ற சொல்லை விரும்ப மாட்டார்கள். ஹிந்தியில் குறிப்பிடும் போது (ரூபாய் நோட்டில்) பாரதிய ரிசர்வ் பைங் என்றே இருக்கும். பாரதஸ்டேட் பைங் பாரதிய ஜனதா கட்சி என்பனவற்றை ஒப்பு நோக்குங்கள்.

     பார்ப்பனியர்கள் நடு ஆசியாவிலிருந்து இமயத்தின் கைபர், போலன் கணவாய் வழியாக நாடோடிகளாக வட இந்தியாவில் ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சம் அடைந்தார்கள்.

     இந்தியாவில் முதன் முதலாக நுழைந்த அன்னியக் குடிகள் ஆரியர்கள். பஞ்சம் பிழைக்க வந்தவர்கள்; தமிழர்களால் ஆதரிக்கப் பட்டு அடைக்கலம் பெற்றவர்கள்.

     பின்னர் அராபியர், துருக்கியர், கொள்ளையடிக்கவும் நாடு பிடிக்கவும் வந்தவர்கள்.

     தொடர்ந்து வந்த ஐரோப்பியர்கள் வணிகம் செய்ய வந்து இந்தியாவில் இருந்த குழப்பங்களைப் பயன் படுத்தி நாட்டைப் பிடித்தவர்கள்.

     ஆரிய அராபிய துருக்கிய ஐரோப்பிய தொடர்பில் வியாபார-கலவை மொழியாக உருவானது தாம் ஹிந்தி. ஹிந்தி இந்தியாவின் வட பகுதியில் பரவலாக பேசப்படுகிறது.

     இந்தியாவுக்கு தேசிய மொழியே கிடையாது.

ஹிந்திக்கும் ஆங்கிலத்திற்கும் அலுவல் மொழி தகுதி கொடுக்கப் பட்டிருந்தது.

பின்னர் அத்துடன் எட்டாவது அட்டவணையில் அலுவல் மொழிகளாக-

1.தமிழ் 2.அசாமியம் 3.ஆங்கிலம் 4.ஹிந்தி 5.உருது 6.ஒரியம் 7.கன்னடம் 8.கசுமீரியம் 9.குசராத்தியம் 10.கொங்கணியம் 11.சந்தாளியம் 12.சமசுகிருதம்  13.சிந்தி 14.தெலுங்கு 15.நேபாளியம் 16.பஞ்சாபியம் 17.போடோயம் 18.மணிப்புரியம் 19.மராத்தி 20மலையாளம் 21மெய்தி 22.வங்காளம் அறிவிக்கப்; பட்டது.

     அந்த அறிவிப்பின் படி முன்னர் அலுவல் மொழிகளாக அறிவிக்க பட்ட ஆங்கிலமும் ஹிந்தியும் மேற்கண்ட அலுவல் மொழிப் பட்டியலுடனேயே உள்ளடக்கப்பட்டது.

     சட்டப்படி ஹிந்தியையோ ஆங்கிலத்தையோ மட்டுமே அலுவல் மொழிகள் என்று கூட சொல்லக் கூடாது; இந்தி தேசியமொழி என்பதெல்லாம் திருட்டுத்தனம்.

     ஹிந்தி அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தின் காரணமாகவும், நடுவண் அரசில் மற்ற மொழி சார்ந்தவர்களின் தலைமை ஆர்வம் இன்மை காரணமாகவும் தாம், நடுவண் அரசின் பலதுறைகளில் தனிப்பட்ட முறையில் ஹிந்தி வளர்ப்பு அல்லது திணிப்பதற்கு அரசே முகவராக செயல்படுத்தப் படுகிறது.

     இந்தியா உட்பட பல மூன்றாம் உலக நாடுகள் 1950 களுக்கு முன்பு இல்லை.

     இந்தியத் துணைக்கண்டம் 500க்கும் மேற்பட்ட சிற்றரசுகளாக இருந்தன. தொடர்ந்து படையெடுப்புக்கள், இறுதியாக முகலாயர், பின்பு ஆங்கிலேயர் ஆகியோர் மொத்தமாக இந்தியத் துணைக்கண்டப் பகுதிகளை ஒன்றாக ஒற்றையாட்சியின் கீழ் கொண்டு வந்தனர்.

     பின்பு 1947- இல் பிரிட்டிஸ் வெளியேற இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தது. இந்துக்களும் முஸ்லிம்களும் இரண்டாகப் பிரித்துக் கொண்டனர். இந்தத் தலைமைகளின் கீழ் பல தேசிய இனங்கள் அடிமையாயின. இருபத்தைந்துக்கும் மேலான மொழிகள் இந்தியத் துணைக்கண்டத்திலிருந்தன. ஆங்கிலேயர் ஆதிக்கம் காரணமாக ஆங்கிலமும் இருந்தது.

     ஆங்கில அறிவின் காரணமாகத்தான் பல நாட்டு தத்துவங்களும் சித்தாந்தங்களும் அறிமுகமாயின.

     ஹிந்தியைத் திணிப்பதன் மூலம் பல மொழிகள் பேசியவர்கள் நிறைந்த நாட்டை ஒரு தேசியத்தில் அடைக்க முயன்றார்கள்.

     மற்ற சிறுபான்மை மொழிகளின் அடையாளங்களை அழிக்க முயன்றார்கள். அன்றைக்கு ஆங்கிலம் இருக்கும் நிலைக்கு பதிலாக ஹிந்தியைத் திணிக்க எத்தனித்தார்கள்.

     நாட்டுக்கு விடுதலை பெற்றுக் கொண்ட காங்கிரஸில் இருந்தவர்கள் பெரும்பான்மையான தலைவர்கள் ஹிந்தியை தாய் மொழியாகக் கொண்டவர்கள். ஹிந்தி வெறியர்கள். ஹிந்தியை தாய்மொழியாகக் கொள்ளாத பல கோடி இந்தியர்களுக்கு தேசிய மொழி என்று திருட்டுத்தனமாக ஹிந்தியைத் திணிக்க முயன்றனர்.

     இது போன்ற பிரச்சனைதான் கிழக்கு பாகிஸ்தானில் உருதுவைத் திணித்த போது; வங்காளிகள் அதை எதிர்த்தனர், வங்கதேசம் உருவானது.

     ஹிந்தித் திணிப்பைத்தான் ஹிந்தி எதிர்ப்பு என்றும் ஹிந்தி வெறுப்பு என்றும் திரித்து பயன்படுத்துகின்றனர். மற்றவர்கள் மீது தம் மொழியைத் திணித்து அவர்களை அடிமைப்படுத்த நினைப்பவன் மொழி வெறியனா அல்லது தம் மொழிக்காக போராடுகிறவன் மொழிவெறியனா?

     ஹிந்தி வெறியர்கள் என்று யாருமே சொல்லக் காணோம். ஹிந்தி வெறியர்கள்தான் போராட்டத்தை அடக்க நடுவண் ரிசர்வ் படையை அனுப்பினார்கள். போராடியவர்களை சுட்டுக் கொன்றார்கள்.

     ஹிந்தி வெறியன் என்று யாருமில்லையாம். ஆனால் நமக்கு மட்டும் ஹிந்தி வெறுப்பாளன் பட்டம்.

     சரி இப்படி வைத்துக் கொள்வோம், ஒரு வேளை காங்கிரஸில் தமிழர்கள் அல்லது தமிழ் வெறியர்கள் அதிகமாக இருந்து, தமிழை இந்தியாவின் தேசிய மொழியாக அறிவித்திருந்தால் அதை மற்றவர்கள் எதிர்த்திருந்தால் என்ன நிலை எடுப்பார்களோ அது போலத்தான் இதுவும.;

     இந்த உலக மய காலத்தில் வட இந்தியர்கள் தென்னிந்தியா நோக்கி பிழைக்க வரும் நிலை இருக்கிறது. இன்னும் வந்து பழைய பாட்டையே பாடிக்கொண்டிருப்பது ஒன்று அறியாமை இல்லையென்றால் அயோக்கியத்தனம்.

     இந்திய அரசிலமைப்பு எட்டாவது அட்டவணைச் சட்டப்படி இந்தியாவின் தமிழ் உள்ளிட்ட 22 மொழியினரும் இந்தியாவின் எந்த அலுவல்களையும் தங்கள் மொழியில் கோர உரிமை உண்டு. ஆங்கிலம் உள்ளிட்ட எந்த மொழிகளும் மற்ற மொழிகள் மீது மேலாதிக்கம் செய்;ய உரிமையில்லை.

முதல் அட்டவணை : மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பட்டியல்.

இரண்டாவது அட்டவணை : குடியரசுத் தலைவர், ஆளுநர், உச்ச, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியங்கள்.

மூன்றாவது அட்டவணை : பதவி யேற்பு உறுதி மொழிகளின் பட்டியல்.

நான்காவது அட்டவணை : மாநிலங்களுக்கான ராஜ்யசபா இடங்களின் எண்ணிக்கை.

ஐந்தாவது அட்டவணை : பட்டியல் பகுதிகள் மற்றும் பழங்குடியினர் நிர்வாகம்.

ஆறாவது அட்டவணை : அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம், அருணாசல பிரதேசம், இமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் நிர்வாகம்.

ஏழாவது அட்டவணை : மத்திய மாநில அதிகார பகிர்வு பட்டியல்.

எட்டாவது அட்டவணை : அங்கீகரிக்கப்பட்ட இந்திய அலுவல் மொழிகளின் பட்டியல் (22 மொழிகள்).

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.