இயங்கலையில் தங்கம் வாங்கி சேமிக்கவும், விலையேற்றத்தில் விற்று ஆதாயம் பெறவும், நல்லதொரு வாய்ப்பு நடைமுறையில் இருக்கிறது. இந்த வாய்ப்பை உங்களுக்கு வழங்குவது உலகப் பேரறிமுக பணப்பரிமாற்ற செயலி கூகுள்பேவில் 15,மாசி,தமிழ்த்தொடராண்டு-5124: கூகுள்பே பணப்பரிமாற்ற செயலிவழியாக நீங்கள் தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் கட்டண முறைகளைப் பயன்படுத்தி, உலோகங்கள் மற்றும் கனிமங்கள் வணிகக் கழகம், நிறுவனத்திடமிருந்து எண்ணிம முறையில் தங்கம் வாங்கிச் சேமிக்கலாம். நீங்கள் வாங்கக்கூடிய மொத்தத் தங்கத்தின் மதிப்புக்கு எந்த வரம்பும் கிடையாது. இருப்பினும் ஒரு நாளில் நீங்கள் வாங்கக்கூடிய வரம்பாக ரூபாய் 50,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தங்கம் வாங்குவதற்கான குறைந்தபட்சத் தொகை ரூபாய் ஒன்றே ஒன்றுதான். ரூபாய் 49,999க்கும் அதிகமாகத் தங்கம் வாங்கும்போது 'உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுதல்' (கேஒய்சி) விதிமுறைகளை நிறைவுசெய்த பிறகே மேற்கொண்டு தங்கத்தை வாங்க இயலும். உங்கள் செல்பேசியில் கூகுள்பே செயலியைத் திறக்கவும். அதில் தேடல் பட்டியில் தங்க லாக்கர் என்று ஆங்கிலத்தில் உள்ளிட்டுத் தேடவும். வாங்க விரும்பும் தங்கத்திற்கான தொகையை இந்திய ரூபாய் மதிப்பில் உள்ளிட்டு பணம் செலுத்து என்பதைத் தட்டினால், பணப் பரிமாற்றம் உறுதிசெய்யப்பட்ட சில நிமிடங்களில் நீங்கள் வாங்கியுள்ள தங்கத்தை உங்களது தங்க லாக்கரில் பார்க்கலாம். நீங்கள் வாங்கிய தங்கத்தை எப்போது வேண்டுமானலும் விற்கவும் முடியும். அதற்கும் இதே நடைமுறைதான். விற்க (செல்) என்பதைத் தொட்டு, உங்களுக்கு கிடைக்கும் தொகை ஆதாயமானதா என்று கவனித்து விற்றுக் கொள்ளலாம்.
தங்க லாக்கர் தனிச்செயலி உங்கள் செல்பேசியில் தோன்றும். அதில் தோன்றும் வாங்கு (பை) என்பதைத் தட்டவும். தங்கத்தின் தற்போதைய சந்தை விலை (வரி உட்பட) தோன்றும். ஒரே நாளில் தங்கத்தின் விலை பலமுறை மாறக்கூடும். எனினும் நீங்கள் தங்கம் வாங்கத் தொடங்கிய 5 நிமிடங்களுக்கு விலை மாற்றப்படாது. அஞ்சல் குறியீட்டின்படி இடத்தைப் பொறுத்து வரிகளில் மாற்றம் இருக்கலாம்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,537.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.