நாகலாந்து தீவிரவாத அமைப்பின் தலைவர் மகன்தான், மணமகனாம். திருமணத்தில் மணமக்கள் இயந்திரத் துப்பாக்கியுடன் தோன்றியிருக்கிறார்கள். ஆனால் இந்த அமைப்பு இந்திய அரசுடன் அமைதிக்காக கலந்துபேச உள்ளதாம். இருக்கட்டுமே அதற்காக இப்படியெல்லாம் திருமண நிகழ்வில் மிரட்டலாமா? இந்த அமைப்பின் தலைவரான போகோட்டோ கிபா என்பவரின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நாகாலாந்தின் திமாபூர் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை நடந்தது. அந்த திருமண நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட மணமக்கள் படமாக, மணமக்கள் இருவரும் கையில் ஏ.கே. 56, மற்றும் எம்.16 ரக அதி நவீன தானியங்கி இயந்திர துப்பாக்கியை கையில் வைத்துக்கொண்டிருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாகியுள்ளது. கழுத்தில் மாலையுடன் இருக்க வேண்டிய மணமக்கள் இருவரும் இப்படி துப்பாக்கியை காட்டி மிரட்டுவது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்களை பீதிக்குள்ளாக்கியதாம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,334.
26,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவின் வடகிழக்கில் அமைந்திருக்கிற ஒரு மாநிலம் நாகாலாந்து. நாகலாந்தில் மியான்மர் ஆதரவு பெற்ற நாகாலாந்து சோசியலிஸ்ட் கவுன்சில் என்ற பயங்கரவாத அமைப்பு அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.