Show all

பயன்படுத்தக்கூடாத சொற்கள்! நாடாளுமன்றம் பட்டியல் இட்டிருக்கிறது சில பல சொற்களை

இந்திய நாடாளுமன்றம், பயன்படுத்தக்கூடாத சொற்கள் என்று சிலபல சொற்களைப் பட்டியல் இட்டு புத்தகமாக வெளியிட்டிருக்கிறது. வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால் இவைகள் ஆளும் கட்சியை புண் படுத்துகிற சொற்களா? பொதுவாகவே நாகரிகமற்ற சொற்களா என்று புரிந்து கொள்ள முடியும்.

32,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: ஆளும் கட்சியை புண் படுத்துகிற சொற்களா? பொதுவாகவே நாகரிகமற்ற சொற்களா என்று வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடிகிற, சிலபல சொற்களைப் பட்டியல் இட்டு புத்தகமாக வெளியிட்டிருக்கிறது. இந்திய நாடாளுமன்றம். 

இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வரும் திங்கட் கிழமை தொடங்குகிறது. இந்த நிலையில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பயன்படுத்தக்கூடாத சொற்கள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. அதில் ஆங்கில சொற்களும், ஹிந்தி சொற்களும் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன.

அந்தச் சொற்கள் பின்வருவன: ஊழல், ஒட்டுக்கேட்பு ஊழல், வாயாடிகள், வாயாடர்கள், நாடகம், கண்துடைப்பு, வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், கொரோனா பரப்புபவர், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, 

அழிவு சக்தி, காலிஸ்தானி, இரட்டை வேடம், பயனற்றது, நாடகம், ரத்தக்களரி, குரூரமானவர், ஏமாற்றினார், குழந்தைத்தனம், கோழை, குற்றவியல், முதலை கண்ணீர், அவமானம், கழுதை, கண்துடைப்பு, அடாவடித்தனம், போலித்தனம், தவறாக வழிநடத்துதல், பொய், உண்மையல்ல 

முட்டாள்தனம், பாலியல் தொல்லை, குண்டர்கள், லாலிபாப், பாப்கட் ஆகிய சொற்கள் பயன்படுத்தக்கூடாத சொற்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இவற்றை பயன்படுத்தினால் அவைத்தலைவர்கள், அவைக் குறிப்பில் இருந்து நீக்கி விடுவார்கள் என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,311.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.