இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் மொத்தம் 25 பிரிவுகள், 12 அட்டவணைகள், 104 திருத்தங்கள், 448 உட்பிரிவுகள் மற்றும் 117,369 சொற்கள் உள்ளன. அந்த 12 அட்டவணைகளில் அட்டவணை எட்டில் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் இந்தியாவிற்கும், அந்தந்த மாநிலங்களுக்கும் அலுவல் மொழிகள் என்று குறிக்கப்பட்டுள்ளன. 17,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியா விடுதலை பெற்ற பிறகு இந்தியாவின் ஆட்சி மொழி என்றோ, இந்தியாவின் தேசிய மொழி என்றோ, இந்தியாவின் எந்த மொழிக்கும் தகுதி வழங்கப்படவில்லை. இந்தியா ஒரு தேசம் என்றும் பேசப்படவில்லை. கூட்டாட்சி என்றும் ஒன்றய ஆட்சி என்றுமே குறிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் மொத்தம் 25 பிரிவுகள், 12 அட்டவணைகள், 104 திருத்தங்கள், 448 உட்பிரிவுகள் மற்றும் 117,369 சொற்கள் உள்ளன. அந்த 25 சட்டப்பிரிவுகளில் அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 17ல் ஹிந்தியும், ஆங்கிலமும் அலுவல் மொழிகள் என்று குறிக்கப் பட்டன. அந்த 12 அட்டவணைகளில் அட்டவணை எட்டில் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் இந்தியாவிற்கும், அந்தந்த மாநிலங்களுக்கும் அலுவல் மொழிகள் என்று குறிக்கப்பட்டுள்ளன. அரசியல் சட்டப்பிரிவு 17 ஆனது, ஆங்கிலத்தை அகற்றும் போது அந்த இடத்தில் ஹிந்தியை நிறுவுவதற்கான சட்டப்பிரிவாக வைக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டப்பிரிவில் ஆங்கிலத்தை 15 ஆண்டுகளுக்குள் அப்புறப்படுத்திவிட்டு ஹிந்தியை நிறுவ மட்டுமே காலம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்தியா விடுதலை பெற்று எழுபத்து ஐந்து ஆண்டுகளாக ஆங்கிலத்தை அப்புறப்படுத்த சிறப்பாக தமிழ்நாடும், பொதுவாக மற்ற மற்ற மாநிலங்களும் அனுமதிக்காமல் தொடரும் நிலையில் கடந்த அறுபது ஆண்டுகளாக 17 சட்டப்பிரிவை அப்புறப்படுத்தாமல் வைத்துக் கொண்டிருப்பது ஒன்றிய ஆட்சிக்கு முனைகிற கட்சி காங்கிரசானாலும், பாஜகவானாலும் அவைகளில் இருப்பவர்கள் ஹிந்தி ஆதிக்கவாதிகளாக இருக்கிற காரணம் பற்றியதாகும். அரசியல் சட்டத்தின் 8-வது அட்டவணை மொழிகளை ஆட்சிமொழிகளாக மாற்றுக என்று வைகோ நாளது 11,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5116 (27.08.2014) அன்று சென்னை உயர் அறங்கூற்றுமன்ற மதுரை கிளையில் வைகோ அவர்கள் பதிகை செய்த பொதுநல மனு ஒன்றில், “இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் ஒன்றிய அரசின் ஆட்சி மொழியாக்கிட உத்தரவிட வேண்டும்" என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ஒன்றிய அமைச்சரவைச் செயலாளர் பதிலளிக்க உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் ஒன்றிய அமைச்சரவைச் செயலாளர் பதிகை செய்த பதில் மனுவில், “ஒன்றிய அரசின் அலுவல் மொழிகள் குறித்து அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தால் மட்டுமே நிறைவேற்ற முடியும், அறங்கூற்றுமன்ற உத்தரவின் மூலம் எதுவும் செய்ய முடியாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒன்றிய அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞரும் அரசின் நிலைப்பாடாக சிலவற்றைக்கூறி மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார். அரசியல் சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள தமிழ் மொழி உள்ளிட்ட 22 மொழிகளை இந்தியாவின் ஆட்சிமொழியாக, அலுவல் மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்பதான கோரிக்கை மிகவும் நியாயமானது. இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கெண்ட நாடு என்றும், தேசிய ஒருமைப்பாடு நீடிக்க வேண்டும் என்றும் விரும்புகிற போது, பல்வேறு தேசிய இனங்களின் மொழிகளுக்கும் சம உரிமை, சம வாய்ப்பு அளிப்பது மட்டுமே சரியான நிலைப்பாடாக இருக்கும். 2001 ஆம் ஆண்டில் இதே கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் தனி நபர் சட்ட முன்வடிவை நான் கொண்டுவந்து, அதன் மீது விவாதம் நடைபெற்றது. சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் தமிழ் மொழியை அலுவல் மொழியாக, வழக்காடும் மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக தமிழ்நாட்டின் சார்பில் ஒன்றிய அரசிடம் வற்புறுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் உண்மையான கூட்டாட்சி நிலைபெற மாநில மக்களின் உணர்வுகளுக்கும், மொழிகளுக்கும் உரிய மதிப்பு அளிக்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை ஆகும். ஒன்றிய அரசின் தேர்வாணையத் தேர்வுகளில் தமிழ்மொழி உள்ளிட்ட அனைத்து ஒன்றிய மொழிகளும் புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்தது. எனவே, யூ.பி.எஸ்.சி. முதல் நிலைத் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், ஒன்றிய அரசு தேர்வாணையம் விடாப்பிடியாக தேர்வைக் களைய மறுத்துவிட்டது. மாநிலங்களின் பங்களிப்பு நாட்டின் வளர்ச்சிக்கு கட்டாயம் என்று தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அடிக்கடி கோடிட்டுக்காட்டி வருகிறார். எனவே, அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையிலும், இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனங்களின் உரிமைகளை நிலைநாட்டும் வகையிலும் அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் ஆட்சிமொழிகளாக அங்கீகரிக்க உரிய அரசியல் சட்டத் திருத்தத்தை ஒன்றிய அரசு கொண்டுவர வேண்டும் என்று அப்போது கூறியுள்ளார். அலுவல் மொழியாக தமிழ் செயல்பட, அரசியல் அமைப்புச் சட்டத்தின் அட்டவணை எட்டு தெளிவாக வரையறுக்கிறது. அதை அறங்கூற்று மன்றத்திற்கு புரிய வைக்காமல் அடுத்து கட்டமான அந்த அட்டவணை மொழிகளுக்கு ஆட்சிமொழி அதிகாரம் கேட்டு அடுத்த கட்டத்திற்கு வைகோ கேட்பு வைத்ததால் ஒன்றிய அரசு எளிதாக அந்த வழக்கில் தட்டிக்கழித்து விட்டது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அட்டவணை எட்டின் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளின் வழக்கறிஞர்கள், உச்ச அறங்கூற்றுமன்றம் வரை எந்த அறங்கூற்றுமன்றத்திலும், அட்டவணை எட்டை துணைக்கு அழைத்துக் கொண்டு தாராளமாகத் தங்கள் தங்கள் மொழியில் வாதாடலாம். வைகோ போன்றவர்கள் மட்டும் வாதாடலாமா வாதாடலாமா? என்று அனுமதி கேட்டுக் கொண்டிருக்கின்றார்களேயொழிய துணிச்சலாக வாதாடி வாகை சூட முயலவில்லை.
அட்டவணை எட்டில் குறிக்கப் பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் இந்தியாவிற்கும் இந்திய மாநிலங்களுக்கும் அலுவல் மொழிகள் என்பதைக் குறிப்பிட்டு விட்டு, சட்டப்பிரிவு 17ல் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி அலுவல் மொழிகள் என்று குறிப்பிட்டாலும், ஹிந்தியை மட்டும் வைத்துக் கொண்டு ஆங்கிலத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்ற செய்தியே அந்தச் சட்டப்பிரிவில் தலைமை இடம் பெறுகிறது.
கடந்த அறுபது ஆண்டுகளாக தோல்வியுற்ற சட்டப்பிரிவை இந்திய அரசியல் அமைப்பில் வைத்துக் கொண்டிருப்பது ஒன்றிய ஆட்சிக்கு முனைகிற கட்சி காங்கிரசானாலும், பாஜகவானாலும் அவைகளில் இருப்பவர்கள் ஹிந்தி ஆதிக்கவாதிகளாக இருக்கிற காரணம் பற்றியதாகும்.
பதினைந்து கூட்டல் அறுபது என கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளாக ஆங்கிலத்திற்கு மாற்றாக ஹிந்தியை நிறுவ முடியாத நிலையில், அட்டவணை எட்டில் அந்த ஹிந்தியும் ஒரு மொழியாக இடம் பெற்றிருக்கிற நிலையில்-
சட்ட உள்பிரிவு 320ஐ நீக்குவதில் இன்றைக்கு பாஜக காட்டி வென்றெடுத்த முனைப்பை-
மற்ற இருபத்தியோரு மொழிக்கான மாநில ஆட்சிக்கு முனையும் அரசியல் கட்சிகளும்-
ஒரு ஐந்து ஆண்டுகள் கூடுதல் கால எல்லை வழங்கி, கடந்த ஐம்பத்து ஐந்து ஆண்டுகளாகத் தூண்ட முனையாதது, தங்கள் தங்கள் மாநில மொழிகளின் அதிகாரத்திற்கு-
இழைத்த பெருந் துரோகமாகும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.