நின்று கொல்லும் பணமதிப்பிழப்பு குறித்து, அன்றே தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாதிருந்த 92 அகவை மூதாட்டியை, இன்று கவ்வியது சோகம். பாஜக அரசின் நின்று கொல்லும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை வரிசையில் 10,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பணமதிப்பிழப்பு தெரியாமல் கோவையில் 92 அகவை மூதாட்டி ஒருவர் 31,500 மதிப்பில் பழைய ரூபாய் தாள்களை சேமித்து வைத்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு மூன்றாண்டுகள் கடந்த நிலையிலும், நின்று கொல்லும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை வரிசையில் தொடரும் சோகமாக இந்த நிகழ்வு தொடர்ந்திருக்கிறது. பணமதிப்பிழப்பு செய்யப்பட்டது தெரியாமல், 60 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு பழைய ரூபாய் தாள்களை திருப்பூர் மாவட்டம் பூமலூரைச் சேர்ந்த ரங்கம்மாள், தங்கம்மாள் என்ற மூதாட்டிகள் வைத்திருந்தது கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெரியவந்தது. அதில், ரங்கம்மாள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார். அவர்கள் சிறுக, சிறுக சேமித்து வைத்த பணத்துக்கு மதிப்பே இல்லாமல் போனது. தற்போது, இதேபோல கோவையிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. கோவையை அடுத்த கொண்டையம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 92 அகவை கமலம்மாள். இவரது கணவர் இறந்து பல ஆண்டுகளாகிவிட்ட நிலையில் இவர்களின் இரண்டு மகள்கள் மற்றும் மகனின் பராமரிப்பில் வாழ்ந்து வருகின்றார். கமலம்மாள் சிறுக, சிறுக சேமித்தப் பணத்தை நிலைப்பேழையில் வைத்துள்ளார். ரூ.33,000 சேமித்து வைத்திருக்கிறார். இந்நிலையில் அண்மையில் மூதாட்டி கமலாம்பாளின் நிலைப்;பேழையை தூய்மைப்படுத்தியபோது, அதில் ஒரு புடவைக்குக் கீழே பணம் இருப்பது தெரியவந்துள்ளது. இந்தப் பணத்தை மாற்ற முடியாமல் கமலாம்பாளின் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். மூதாட்டி கமலாம்பாள் தனக்கு இறுதிகாலத்தில் உதவும் என சிறுக ,சிறுக சேமித்த அந்த பணம் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இப்போது யாருக்கும் உதவாமல் போனது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,375.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.