முந்தைய அரசு கொண்டு வந்த நீட் தேர்வை ஏன் இந்த அரசு திரும்பப் பெறக் கூடாது என சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. 18,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் சில தலையாய கேள்விகளை எழுப்பி உள்ளது. நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு தனியார் பயிற்சி மையங்களே பயன்பெறும் வகையாக, அவர்களால் அதிக கட்டணம் அள்ளப்படும் அவலம் அதிகரித்து விட்டது. தனியார் பயிற்சி மையங்களால் ரூ.5 லட்சம் கட்டணம் செலுத்தி பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்கிறது. பயிற்சி மையங்களால் ஏழை மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியின் கதவுகள் திறக்கப்படுவதில்லை. இவ்வழக்கில் பதிலளித்துள்ள தமிழக அரசு, தனியார் பயிற்சி மையங்களில் நீட் தேர்வு பயிற்சி பெற்ற மாணவர்களே அதிக அளவில் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். அதிலும் கூட முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவே என தெரிவித்துள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,326.
மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு இந்திய அரசு செயல்பட வேண்டும். நீட் தேர்வு ஆள் மாறாட்டம் தொடர்பாக வேறு மாநிலங்களில் புகார்கள் ஏதும் வந்துள்ளதா என இந்திய அரசு பதிலளிக்க வேண்டும். நேரடி புகார்கள் ஏதும் வந்துள்ளதா என இந்தியக் குற்றப்புலனாய்வுத்துறையும் பதிலளிக்க வேண்டும். இவ்வாறு சென்னை உயர்அறங்கூற்றுமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.