மருத்துவமும் ஒரு கல்விதானே! அதைப் படிப்பதற்கு மட்டும் எதற்கு நீட் என்கிற ஒரு ஒன்றியத் தகுதித் தேர்வு? பனிரெண்டு ஆண்டுகள் கற்ற கல்வியை மதிக்காமல், சில பல தனிபயிற்சி நிறுவனங்களில் படித்து தகுதிபெற வேண்டிய தேவை என்ன? சில பல தனிபயிற்சி நிறுவனங்கள் தருகின்ற பயிற்சியே போதும் என்றால், எதற்கு பனிரெண்டு ஆண்டு கல்வி? இப்படி நீட்டின் மீது பல ஆயிரம் வினாக் கணைகளைத் தொடுத்தாலும், அத்தனையையும் தட்டிவிட்டுவிட்டு நீட்டை கொண்டாட வேண்டிய கட்டாயத்திற்கு என்ன தேவை இருக்க முடியும், என்பதை விளக்குகிறது இந்தக் கட்டுரை.

09,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5126:

ஒன்றாம் வகுப்பு முடித்தவர், தமிழ்நாட்டின் எந்தப் பள்ளியிலும் இரண்டாம் வகுப்பு சேர முடியும்.
ஐந்தாம் வகுப்பு முடித்தவர், தமிழ்நாட்டின் எந்தப் பள்ளியிலும் ஆறாம் வகுப்பு சேர முடியும்.
பத்தாம் வகுப்பு முடித்தவர், தமிழ்நாட்டின் எந்தப் பள்ளியிலும் பதினொன்றாம் வகுப்பு சேர முடியும்.

பனிரெண்டாம் வகுப்பு முடித்தவர், தமிழ்நாட்டின் எந்தப் கல்லூரியிலும் கலையியலில் (ஆர்ட்ஸ்) பதிமூன்றாம் வகுப்பு சேர முடியும்.
பனிரெண்டாம் வகுப்பு முடித்தவர், தமிழ்நாட்டின் எந்தப் கல்லூரியிலும் வணிகவியலில் (காமர்ஸ்) பதிமூன்றாம் வகுப்பு சேர முடியும்.
பனிரெண்டாம் வகுப்பு முடித்தவர், தமிழ்நாட்டின் எந்தப் கல்லூரியிலும் இயல்அறிவில் (சயின்ஸ்) பதிமூன்றாம் வகுப்பு சேர முடியும்.
பனிரெண்டாம் வகுப்பு முடித்தவர், தமிழ்நாட்டின் எந்தப் கல்லூரியிலும் பொறியியலில் பதிமூன்றாம் வகுப்பு சேர முடியும்.
பனிரெண்டாம் வகுப்பு முடித்தவர், தமிழ்நாட்டின் எந்தப் கல்லூரியிலும் மருத்துவத்தில், பதிமூன்றாம் வகுப்பு சேர முடியும், என்பதில் மட்டும் ஏன் தடை?

தமிழ்நாட்டின் மாநிலக் கல்வித்திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் எட்டு இலட்சம் மாணவர்கள் வெளி வருகிறார்கள். அவர்களில் விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டும் மருத்துவக் கல்வி என்றால் தமிழ்நாட்டில் உள்ள தமிழ்நாட்டு அரசு மருத்துவக் கல்லூரிகள் போதும். பனிரெண்டாம் வகுப்பு முடித்தவர், தமிழ்நாட்டின் எந்தப் கல்லூரியிலும் மருத்துவத்தில், பதிமூன்றாம் வகுப்பு சேர முடியும், என்பதில் தடை போடுவதற்கான தேவை எழவில்;லை.

ஆனால:; 
1.தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் படித்தவர்கள், மருத்துவக் கல்விக்கு மட்டும், தமிழ்நாட்டு அரசு கல்லூரிக்குப் போட்டியாக வருகிறார்கள்.

2.தமிழ்நாட்டில் ஒன்றியப் பாடத்திட்டத்தில் படித்தவர்கள், மருத்துவக் கல்விக்கு மட்டும், தமிழ்நாட்டு அரசு கல்லூரிக்குப் போட்டியாக வருகிறார்கள்.

3.இந்தியாவின் அனைத்து பிற மாநிலங்களிலும் எந்தப் பாடத்திட்டத்தில் படித்தவர்களும், மருத்துவக் கல்விக்கு மட்டும், தமிழ்நாட்டு அரசு கல்லூரிக்குப் போட்டியாக வருகிறார்கள்.

இந்திய அளவில், ஒன்றியப் பாடத்திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் 12ம் வகுப்பு முடித்து வெளிவரும் மாணவர்கள் 14 இலட்சத்து இருபத்தி ஆறாயிரம்.

இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டின் மாநிலக் கல்வித்திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் வெளிவரும் எட்டு இலட்சம் மாணவர்களுக்குப் போட்டியாக வருகிறார்கள்.

இதற்கு நிரந்தரத் தீர்வு இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கூடுதல் அரசு மருத்துவக் கல்லூரிகள, கூடுதல் இடங்கள் என்பது மட்டுமே.

ஆனால் அதைச்செய்யாமல், நீட் தேர்வை நுழைக்கின்றனர் வட இந்திய ஆட்சியாளர்கள், வட இந்தியர் ஆதிக்கம் நிறைந்த அறங்கூற்று மன்றம். அவர்கள் உமி கொண்டுவருவார்கள், தமிழ்நாடும் சில தென் மாநிலங்களும் அரிசி கொண்டுவரும். அனைத்தையும் கலந்து ஊதி ஊதி அரிசியைத் தின்னலாம் அனைவரும் சமமாகப் பகிர்ந்து, என்கிற ஏமாற்றுத் திட்டமே நீட்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,72,082.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.