இத்தனை நாட்களாக
புலனம், முகநுநூல் போன்ற சமூக வலைதளங்களில் நெகிழி அரிசி குறித்த செய்திகள் வெளியாகியன.
சீனாவில் தான் நெகிழி அரிசி தயாரிக்கப்படுகிறது எனவும் செய்திகள் பரவியது. இதுபோன்ற நெகிழி அரிசிகள் தனியாக விற்பனை செய்யப்படுவது
கிடையாது. அவை உண்மையான அரிசியுடன் கலக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது. இதனை அரிசியாக
இருக்கும் போது கண்டுபிடிக்க முடியாது. சமைத்தால் மட்டுமே அரிசியில நெகிழி அரிசி கலப்படம்
செய்யப்பட்டிருப்பதைக் கண்டுபிடிக்க முடியும். இந்தியாவில் நெகிழி அரிசி கலப்படம் நடந்தது என்பதை
உறுதிசெய்யும் வகையில் எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் நெகிழி அரிசி கலப்படம் தொடர்பாக
ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையானது பரவலாக இருந்து வந்தது. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் ஹால்ட்வானி நாளங்காடியில்
நெகிழி அரசி விற்பனைக்கு வந்து உள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி
உள்ளது. நாளங்காடியில் அரிசி வாங்கி வந்து சமைத்து சாப்பிட்ட மக்கள் உணவின் ருசியில்
மாற்றம் தெரிவதை உணர்ந்து உள்ளனர். இதற்கிடையே நெகிழி அரிசி கலப்படம் செய்யப்பட்ட சோற்றை
சிறார்கள் பந்தாக உருட்டி விளையாடிய காட்சியானது விரைவாகப் பரவியது. இச்சம்பவம் தொடர்பாக
நடவடிக்கை தொடங்கி உள்ளது என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. மாவட்ட நீதியாளர் கே கே மிஸ்ரா பேசுகையில், இது
தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு குழு அமைக்கப்பட்டு உள்ளது. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்
மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அடங்கிய குழுவானது விசாரிக்கும். இதுதொடர்பாக சோதனையில்
ஈடுபடும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிஉள்ளார். இலங்கையிலும் நெகிழியில் உற்பத்தி செய்யப்பட்ட
அரிசி விற்பனை செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகியன. இது தொடர்பான காணொளியும் வெளியானது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.