Show all

சுற்றுலாவிற்கும், வேலைவாய்ப்பிற்கும், விழாவிற்கும் சிறந்திருக்கும் தமிழகம்! அடையாளங்காட்டினார் மோடி

அடையாளங் காட்டி பெருமை கொண்டார் இந்தியத்தலைமைஅமைச்சர் மோடி: தமிழகச் சுற்றுலாவிற்கான கன்னியாகுமரியில் இருக்கும் விவேகானந்தர் நினைவிடம், வேலைவாய்ப்பிற்கான திருப்பூர், விழாசிறப்பிற்கான பொங்கல் திருநாளில் முன்னெடுக்கப்படும் திருவள்ளுவர் நாள் ஆகியன குறித்து நேற்று வானொலியில் மனதின் குரல் நிகழ்ச்சியில்  பேசி.

15,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நேற்று வானொலியில் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி தமிழகச் சுற்றுலாவிற்கான கன்னியாகுமரியில் இருக்கும் விவேகானந்தர் நினைவிடம், வேலைவாய்ப்பிற்கான திருப்பூர், விழாசிறப்பிற்கான பொங்கல் திருநாளில் முன்னெடுக்கப்படும் திருவள்ளுவர் நாள் ஆகியனவற்றை அடையாளங் காட்டி பெருமை கொண்டார்.

ஐம்பது ஆண்டுகளாக பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கும் சுற்றுலா தலம் கன்னியாகுமரியில் இருக்கும் விவேகானந்தர் நினைவிடம் என்று தெரிவித்து, இந்தியக் குடிமக்களை இது போன்ற வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலா தலங்களுக்கு சென்று வர அவர் அறிவுறுத்தினார்.

நாட்டு மக்களின் வருமானத்தை பெருக்கவும், உள்நாட்டில் பொருளாதாரம் பெருகவும், மக்களை உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த உள்நாட்டு உற்பத்தி என்பதை நோக்கி ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில் வாழும் இளைஞர்களுக்கு ஹிந்திமொழியில் பெயரிட்ட ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. அந்த திட்டத்தில் பயிற்சி பெற்ற கார்கில் பகுதி கிராமத்தில் வாழ்ந்த பர்வீன் பாத்திமா இன்று திருப்பூரில் இருக்கும் ஒரு ஆடை தொழிற்சாலையில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேற்பார்வையாளராக இருக்கிறார். அவரைப் போல லே லடாக்கில் இருக்கும் பல பெண்கள் ஹிந்திமொழியில் பெயரிட்ட அந்தத் திட்டத்தின் மூலம் தமிழகத்தின் அதே ஆடை தொழிற்சாலையில் வேலை செய்கின்றனர்.

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில் வாழும் இளைஞர்களுக்கு ஹிந்திமொழியில் பெயரிட்ட அந்தத் திட்டத்தின் மூலம் 77 வெவ்வேறு விதமான தொழில்களில் பயிற்சியளிக்கப்பட்டது. இதில் 18000 இளைஞர்கள் பலனடைந்தனர் எனக் கூறினார்.

இந்தியாவில் எதிர்வரும் மாதத்தில் கொண்டாடப்படும் திருவிழாக்கள் குறித்து, கதிரவனின் நகர்வை வைத்து இம்மாதம் இந்தியா முழுவதும் நிறைய திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இந்த திருவிழாக்கள் அனைத்தும் பயிர்களின் வளர்ச்சி மற்றும் செழிப்பை வைத்து கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருவிழாவிற்கு அடுத்த நாள் திருவள்ளுவருக்கு அர்பணிப்பதாக திருவள்ளுவர் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாக்கள் அனைத்தும் மக்களுக்கு மகிழ்ச்சியைத் தரவே கொண்டாடப்படுகின்றன என்று பேசி சுற்றுலாவிற்கும், வேலைவாய்ப்பிற்கும், விழாவிற்கும் சிறந்திருக்கும் தமிழகத்தை அடையாளங்காட்டினார் மோடி 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,382.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.