Show all

அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களுக்கு எச்சரிக்கை

உணவு பொருள்களின் விலையேற்றம் குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களுக்கு எச்சரிக்கை விடும் வகையாக கருத்து தெரிவித்துள்ளார்.

     நடுவண் அரசு வரி வாங்கி மாநிலத்திற்கு பகிரும் வகையான சரக்கு மற்றும் சேவைவரி நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் நகைகள், வீட்டு பயன்பாட்டுப் பொருள்களின் விலை அதிகரிக்கும் என்பதால் கடந்த 30-ஆம் தேதி வரை விற்பனை வேகமாக நடைபெற்றது.

சரக்கு மற்றும் சேவைவரி எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து வலைதளங்களில் பயன்பாட்டாளர்கள் ஆதாரத்துடன் நிரூபித்து வருகின்றனர்.

     சரக்கு மற்றும் சேவைவரி அறிமுக விழாவில் பிரதமர் மோடி பேசுகையில், சரக்கு மற்றும் சேவைவரியை அறிமுகம் செய்து இந்தியாவின் வருங்காலத்திற்கு புதிய பாதை திறக்கப்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவைவரி விதிப்பு இந்திய மக்களாட்சியின்; (மக்களாட்சியா? மக்கள் அடிமைத்தனமா?) மாண்பை காட்டுகிறது. நாட்டின் கூட்டாட்சி (குடிகெடுக்கும்) தத்துவத்திற்கு சிறந்த உதாரணமாக சரக்கு மற்றும் சேவைவரி விளங்குகிறது என்று பேசினார்.

     மேலும் சரக்கு மற்றும் சேவைவரியால் விலை குறைப்பு ஏற்படுமே ஒழிய விலையேற்றம் நடைபெறாது. இதனால் எந்த தரப்பினரும் பாதிக்கப்படமாட்டார்கள் என்று நடுவண் அரசு தெரிவித்துள்ளது. ஆனால் நடுவண் அரசு கூறியதற்கு மாறாக உணவக உணவு பொருள்களின் விலைக்கு அதிகமாக சரக்கு மற்றும் சேவைவரி விதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

     அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் வீட்டில் சமைத்து உண்பவர்களுக்கு அரசு எந்த வரிவிதிப்பையும் விதிக்கவில்லை என்று பெருமையாகக் கூறியுள்ளார்.

     அவர் கூறுவதை பார்த்தால் வீட்டில் உணவு சமைப்பதற்கு வரி விதிக்கவில்லையே என்று மகிழச் சொல்கிறாரா அல்லது இதுபோல் சரக்கு மற்றும் சேவைவரிக்கு எதிர்ப்பு தெரிவித்தால், வீட்டில் உணவு சமைப்பதற்கும் வரி விதிக்கப்படும் என்று மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கிறாரா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

யாருக்கு விதிக்கிறாய் வரி?

காவேரி மேலாண்மை வாரியம் அமைத்தாயா?

நாள்தோறும் இலங்கையிடம் அல்லல் படும் எம் மீனவர்களுக்கு பாதுகாப்பு அளித்தாயா?

அல்லது நிரந்தரத் தீர்வுக்காய் கட்சத் தீவைதான் மீட்டாயா?

எம் பாரம்பரியம் உலகறியச் செய்ய கீழடியை தோண்டினாயா?

எம் மக்கள் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் கதிராமங்கலத்து தோண்டும் பணியை நிறுத்தினாயா?

போராடிய எமது வேளாண்பெருமக்களின் கடனை ரத்து செய்தாயா?

எதற்கு விதிக்கிறாய் வரி? எப்படி விதிக்கலாம் வரி வௌ;ளைக்காரனாவது உன் மக்களிடம் வரி வாங்கி கப்பம் செலுத்து என்றான். நீயோ நானே உன் மக்களிடம் வரி வாங்கிக் கொண்டு உனக்கு சில துண்டுகள் போடுகிறேன் என்கிறாய். என்று எடப்பாடி கட்டபொம்மன் எந்த முழக்கமும் எழுப்பவில்லை!

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.