Show all

வீணடிக்கப்பட்டது ரூ.900கோடி! அரசியல் விளையாட்டால் ஆட்சி அமையவில்லை; மகாராஷ்டிராவில் இனி குடிஅரசுத்தலைவர்ஆட்சி

மகாராஷ்டிராவில் இனி குடிஅரசுத்தலைவர்ஆட்சி. பாஜகவின் சகுனியாட்டத்தால் மகாராஷ்டிராவில், சட்டமன்றத் தேர்தலுக்கு செய்யப்பட்ட ரூ.900கோடி மக்கள் பணம் வீணடிக்கப்பட்டது என்று நடந்து முடிந்த அரசியல் விளையாட்டுக்களை அரசியல் பார்வையாளர்கள் கணிக்கின்றனர்.

27,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மகாராஷ்டிராவில் நேற்று முதல் குடிஅரசுத்தலைவர்ஆட்சி அமலானது. கட்சிகளின் அரசியல் விளையாட்டால், மக்கள் பணம் ரூ.900கோடி மகாராஷ்டரத்தில் வீணடிக்கப்பட்டது. புதிய அரசு அமைவதற்கு வாய்ப்பு இல்லை என ஆளுநர் அறிக்கை அளித்ததைத் தொடர்ந்து. 

மகாராஷ்டிராவில் அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக 105 தொகுதிகளிலும்; அதன் கூட்டணி கட்சியான சிவசேனா 56 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இந்தக் கூட்டணிக்கட்சி ஆட்சி நடத்த பெரும்பான்மை இருக்கிறது. அதாவது இந்தக் கட்சிகளுக்கு கூட்டணி ஆட்சி நடத்த மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். தேர்லுக்குப் பிறகு இணைந்து கூட்டணி ஆட்சி தர இவர்களுக்கு வக்கு இல்லையென்றால் தனித்து நின்றிருக்கலாமே? இப்படி மக்கள் பணம் ரூ.900கோடி வீணடிக்கப்பட்டுள்ளதே? என்று அரசியல் பார்வையாளர்கள் குமுறுகின்றனர்.

மகாராஷ்டிரா எதிர்க்கட்சி கூட்டணியில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதிகளிலும்; காங்கிரஸ் 44 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. மக்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு எதிர்கட்சி தகுதி அளித்திருக்கிறார்கள். காங்கிரஸ் இன்னும் தன்னை மீட்டெடுத்துக் கொள்ளவில்லை என்று தெரிகிறது என்று கணிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

காங்கிரஸ் கூட்டணி சிவசேனாவுடன் இணைந்து எளிதாக ஆட்சி அமைத்திருக்க முடியும். கர்நாடகத்தில் பெற்ற அனுபவத்தில், வேண்டாம்அந்த, பஜக சூழ்ச்சிக்கு பலியாகும், வெட்டி விளையாட்டு என்று, பின்வாங்கி விட்டது. 

ஒட்டு மொத்த இந்தியாவில் பாஜகவின் சகுனி ஆட்டத்திற்கு அரசியல் கட்சிகளால் ஈடுகொடுக்க முடியாத நிலைபோலவே மகாராஷ்டிரத்திலும் எந்தக் கட்சிகளாலும் பாஜகவின் சகுனி ஆட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் போனதால், நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலும், அந்தத் தேர்தலுக்கு மக்கள் பணத்தில் செய்யபட்ட ரூ.900கோடி செலவும் பயனற்றுப் போனது. இனி மகாராஷ்டிராவில் பாஜக மெல்ல மெல்ல காலூன்றும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,335.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.