Show all

சாப்பிடப் பிடிக்காமல் பசியுடன் உறங்குகிறோம்;: ராணுவ வீரரின் ஆதங்கம்

இந்திய ராணுவ வீரர் தேஜ் பதூர் யாதவ் வெளியிட்டுள்ள காணொளி ஒன்று அதிர வைத்துள்ளது. எல்லைப் பகுதியில் காவலில் இருக்கும் தங்களுக்குத் தரமற்ற உணவு வழங்குவதாக அந்த காணொளியில் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

 

முகநூலில் வெளியிட்டுள்ள அந்த  காணொளியில் தேஜ் பதூர் யாதவ்,

‘ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உணவுப்பொருட்களை ராணுவத்தின் உயர்நிலை அதிகாரிகள் வெளியே விற்பனை செய்கின்றனர்’ என வெளிப்படையாகவே கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,

‘காலை உணவாக வீரர்களுக்கு ஒரு பரோட்டா, ஒரு தேநீர் மட்டுமே வழங்கப்படுகிறது. பரோட்டாவுக்குத் தொட்டுக்கொள்ள எதுவும் இல்லை. வெறும் பரோட்டாவைத்தான் சாப்பிட வேண்டும். காய்கறிகள் கூட தருவதில்லை. இவ்வளவு ஏன்? ஊறுகாய் கூட தருவதில்லை. எல்லையில் தினமும் 11 மணி நேரம் பணி புரிய வேண்டும். ஒரு நிமிடம் கூட ஓய்வு எடுக்க முடியாது.

     பணிநேரம் முழுவதுமே நின்று கொண்டேதான் இருக்க வேண்டும். மதிய உணவாக ரொட்டியுடன் பருப்பு என்ற பெயரில் மஞ்சள் கலந்த தண்ணீரை உப்பு போட்டுத் தருகின்றனர். கொஞ்சம் ரொட்டி தருகிறார்கள். இதுதான் எங்களுக்கு வழங்கப்படும் உணவின் அதிகபட்சத் தரம். நின்று கொண்டே இருக்கும் எங்களால் இது போன்ற உணவுகளை சாப்பிட்டு எப்படி பணியாற்ற முடியும்?

பெரும்பாலான இரவுகளில் நாங்கள் வெறும் வயிற்றுடன் உறங்குகிறோம்.

     எங்களது நிலையை பிரதமர் மோடி அறிந்து கொள்ள வேண்டுமென்றே நான் இந்த காணொளியை வெளியிட்டுள்ளேன். எனக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், இந்த விவகாரம் குறித்து முறையான விசாரணை நிச்சயம் தேவை. என்னால் ராணுவ வீரர்கள் பயன் அடைந்தால் எனக்கு மகிழ்ச்சி. ஆனால் எனது கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காமல் சமுக ஊடகத்தில் இருந்து அந்த காணொளியை நீக்க முயற்சிக்கிறார்கள். நாங்கள் படும் கஷ்டங்களை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது காணொளியை சமூக வலைதளத்தில் பதிவேற்றியதால், என்னை வேறு இடத்துக்கு மாற்றியுள்ளனர்.

     கடந்த 1966-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தேன். இதனால், என் பணியை இழப்பது குறித்து வருத்தப்படவில்லை. உண்மையை உலகுக்கு சொல்ல விரும்பினேன். இதற்காக எந்த பிரச்னையையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்’

எனக் கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.