Show all

வாழ்த்துக்கள்- மாநிலக்கட்சி ஹேமந்த்சோரன் முதல்வர்! முக்திமோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி வெற்றி

மொத்தம் 81 தொகுதிகளை கொண்ட ஜார்கண்ட் சட்டமன்றத்தில் குறைந்தது 41 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்ற கட்சி ஆட்சியை பிடிக்க முடியும். அந்த வகையில் காலை 11 மணி அளவில் 41 தொகுதிகளுக்கும் மேலாக காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகள் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி முன்னிலை பெற்று அசத்தியுள்ளது. 

08,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஜார்கண்ட் தனிமாநிலமாக அங்கீகாரம் பெற்று 19ஆண்டுகள் கடந்துள்ளது. 19 ஆண்டுகளில் பத்து முதல்வர்களைக் கண்டுவிட்டது ஜார்கண்ட் மாநிலம். 81சட்டமன்றங்களை கொண்ட சிறியமாநிலமாக அமைந்த போதும், இங்கே மாநிலக்கட்சி தொடங்கப்பட்டும் கூட, காங்கிரஸ், பாஜக கட்சிகளை மாநிலத்திலிருந்து துரத்தியடிக்க முடியாமல் போராடி வருகிறது முக்திமோர்ச்சா என்கிற மாநிலக்கட்சி.

ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த முறை பாஜக ஆட்சியில் இருந்தது. பாஜக ஆட்சி நிறைவடைந்த நிலையில், தற்போது 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றதையடுத்து இன்று வாக்கு எண்ணும் பணி இன்று நடைபெறுகிறது.

ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி அமோக முன்னிலை பெற்றுள்ள நிலையில், அம்மாநிலத்தில் அடுத்த முதல்வர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் தான் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். காங்கிரசும் இதையே கூறியுள்ளது. மொத்தம் 81 தொகுதிகளை கொண்ட ஜார்கண்ட் சட்டமன்றத்தில் குறைந்தது 41 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்ற கட்சி ஆட்சியை பிடிக்க முடியும். அந்த வகையில் காலை 11 மணி அளவில் 41 தொகுதிகளுக்கும் மேலாக காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகள் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி முன்னிலை பெற்று அசத்தியது. 

இந்த நிலையில்தான் தேஜஸ்வி யாதவ் அளித்துள்ள பேட்டியில், ஹேமந்த் சோரன் தலைமையில் தான் நாங்கள் தேர்தலில் களம் கண்டோம். எனவே எங்கள் கூட்டணியின் சார்பில் அவர் தான் முதல்வராக பதவி ஏற்பார். மகாகத்பந்தன் மிகப்பெரிய வெற்றியை அடைய போகிறது என்று தெரிவித்துள்ளார். மகாகத்பந்தன் கூட்டணியில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 43 தொகுதிகளிலும், காங்கிரஸ் 31 தொகுதிகளிலும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் 7 தொகுதிகளிலும் போட்டியிட்டனர். 

முன்னிலை அடிப்படையில் பார்த்தால் 22 தொகுதிகளுடன் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது காங்கிரஸ் 14 தொகுதிகளிலும், ராஷ்ட்ரீய ஜனதாதளம் 5 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினர் கணிசமான அளவில் உள்ளனர். அவர்களின் நம்பிக்கைக்குரிய தலைவராக ஹேமந்த் சோரன் விளங்கி வருகிறார். அவரால்தான், கூட்டணியில் உள்ள, காங்கிரசுக்கும் கணிசமான வாக்குகள் கிடைத்துள்ளன. பாஜகவை வீழ்த்த முடிந்துள்ளது. எனவே எந்த ஒரு சிக்கலுமின்றி ஹேமந்த் சோரன் காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் முதல்வராக அரியணை ஏற போவது உறுதியாகி விட்டது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,373.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.