ஜார்கண்ட் மாநிலத்தில் மாட்டிறைச்சி கொண்டு சென்றவர்
கும்பலால் கொலை செய்யப்பட்டார். அவர் பெயர் அலிமுதீன் என்ற அஸ்கார் அன்சாரி ஜார்க்கண்டின்
ராம்கார் மாவட்டம் பஜர்தண்ட் கிராமத்தைச் சேர்ந்தவர். நேற்று
மாருதி வேனில் மாட்டிறைச்சி கொண்டு சென்றார். இதை அறிந்து சிலர் அவரை வழிமறித்தனர்.
100-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு வாலிபர் அஸ்கர் அன்சாரியை சுற்றி வளைத்து கடுமையாக
தாக்கினார்கள். தகவல்
கிடைத்ததும் காவல்துறையினர் சென்று கும்பலிடம் இருந்து வாலிபரை மீட்டு மருத்துவமனையில்
சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே
அவர் மாட்டிறைச்சி ஏற்றி வந்த வேனையும் வன்முறையாளர்கள் கவிழ்த்துப் போட்டு தீ வைத்து
எரித்தனர். இந்த சம்பவம் காரணமாக ராம்கார் மாவட்டத்தில் கலவரம் ஏற்பட்டு தீவைப்பு சம்பவங்கள்
நடந்தன. வாலிபர்
கொலை தொடர்பாக காவல்துறையினர் வழக்கை திரிக்க முற்பட்டு வருகிறார்கள். இதுபற்றி காவல்துறையினர்
கூறும் போது, அன்சாரி மாட்டிறைச்சி விற்பனை
போன்ற வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார். இதில் அவருக்கு சிலருடன் விரோதம் இருந்தது.
அவர்கள் தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர்,
அவர் மாட்டிறைச்சி கொண்டு சென்றது உறுதிப்படுத்தப்படவில்லை’
என்று தெரிவித்தனர். ஜார்க்கண்ட்
மாநிலம் கிரிதிக் மாவட்டம் பிரியாபாத் கிராமத்தில் கடந்த திங்கட் கிழமையும் இதுபோல
55 அகவை மதிக்கத்தக்கவர் கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் மீண்டும் நேற்று வாலிபர்
கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரதீய
ஜனதா ஆட்சி செய்யும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 12 ஆயிரம் பசுக்களுக்கு சிறப்பு அடையாள
எண் வழங்கப்பட்டுள்ளது. கால்நடை மற்றும் எருமை மேம்பாட்டு நிறுவனம் பசுக்களுக்கு சிறப்பு
எண் வழக்கும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. ராஞ்சி, ஹசாரிபாக், தான்பாத், போகாரொ,
ஜாம்செட்பூர், தியோகார்க், கிரிதிக் மற்றும் லோகார்தாகா ஆகிய மாவட்டங்களில் திட்டம்
அமலுக்குவந்துள்ளது என்றும் 12 ஆயிரம் பசுக்களுக்கு அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது என்றும்
அதிகாரிகள் கூறியுள்ளனர். மாடுகளின் அகவை, இனம், இருப்பிடம், நிறம், கொம்பின் வகை,
வாலின் கலர், சிறப்பு அங்க அடையாளம் மற்றும் பிற தகவல்கள் அதனுடன் இணைக்கப்பட்டதாகவும்
அவர்கள் தெரிவித்தனர். என்பது குறிப்பிடத் தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.