பழைய சந்தை மாதிரியில், புதிய தரவுகளுடன் செல்பேசி! முன்னெடுக்கிறது ஜியோ ஆம் ஆயிரத்திற்கு குறைவான தொகையை செலுத்தி பேசியை வாங்கிக் கொண்டு மீதித் தொகையை தவணையில் செலுத்தலாம் என்று தெரியவருகிறது. 18,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: ரிலையன்ஸ் ஜியோ மற்றும் கூகுள் நிறுவனங்கள் கூட்டணியில் உருவாகி இருக்கும் ஜியோபோன் நெக்ஸ்ட் அடுத்த கிழமை வெளியாகிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொடக்க மாதிரி மிடுக்குப் பேசிகளை இந்திய சந்தையில் வெளியிட இருக்கிறது. இந்த மிடுக்குப்பேசி ஜியோபோன் நெக்ஸட் எனும் பெயரில் விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்த மிடுக்குப்பேசி கூகுள் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி ஜியோபோன் நெக்ஸ்ட் மிடுக்குப்பேசி இந்தியாவில் அடிப்படை மற்றும் அச்சாரவகை என இரண்டு வகைகளில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இவற்றின் விலை முறையே ரூ. 5 ஆயிரம் மற்றும் ரூ. 7 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த மிடுக்குப்பேசி விற்பனைக்கு- தொடக்ககாலத்தில் ரிலையன்ஸ் ஈடுபட்டுவந்த சந்தை மாதிரியை தெரிவு செய்திருக்கிறது. அதாவது இந்தப் பேசியை வாங்குவோர் முதற்கட்டமாக 10 விழுக்காட்டுத் தொகையை செலுத்தினால் போதும். மீதித்தொகையை தவணை முறையில் செலுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த சேவையை வழங்க ரிலையன்ஸ் ஜியோ நாட்டின் முன்னணி வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுடன் கூட்டணி அமைக்கிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,70,995.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.