வருமானவரி தாக்கல் செய்ய நிரந்தரக் கணக்கு எண்ணை
ஆதார் உடன் இணைக்க வேண்டும் என்ற நடுவண் அரசின் உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால
தடை விதித்துள்ளது. வருமானவரி
தாக்கல் செய்ய ஆதார் எண்ணை சமர்ப்பிப்பது கட்டாயம் என்றும் ஆதார் உடன் நிரந்தரக் கணக்கு
எண்ணும் கண்டிப்பாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் நடுவண் அரசு உத்தரவிட்டுள்ளது.
வரும் சூலை மாதம் முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில்,
இந்த உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பல்வேறு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில்
இன்று நடைபெற்றது. இதில், நிரந்தரக் கணக்கு எண் இணைக்கப்பட்ட ஆதார் இருந்தால் மட்டுமே
வருமானவரி தாக்கல் செய்ய முடியும் என்ற நடுவண் அரசின் உத்தரவின் மீது, அரசியல் சாசன
அமர்வு விசாரித்து முடிவெடுக்கும் என்றும் அதுவரை இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பதாகவும்
அறங்கூற்றுவர்கள் அறிவித்தனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.