Show all

இது ஆய்வில் கண்டுபிடிப்பா- அறை போட்டு சிந்திப்பா! கோலம் போட்டதாக கைது செய்யப்பட்டவர்களுக்குப் பாகிஸ்தான் அமைப்புடன் தொடர்பு!

கோலம் போட்டதாக கைது செய்யப்பட்டவர்களுக்கு பாகிஸ்தான் அமைப்புடன் தொடர்பு என்பதாக சென்னை மாநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

17,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பாகிஸ்தானைச் சேர்ந்த ‘அனைவருக்கும் தரவுப்புள்ளிகள்’ என்ற அமைப்புடன் கோலம் நடத்தி போராட்டம் நடத்தியவர்களுக்கு தொடர்பு உள்ளது என்று சென்னை மாநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

கோலம் போட்டதற்காக கைது செய்யப்பட்டவர்கள், வேறு ஒருவரின் வீட்டில் ஏற்கெனவே போடப்பட்டிருந்த கோலத்தின் அருகே, ‘வேண்டாம் குடியுரிமைத் திருத்தச்சட்டம்’ என்று எழுதியுள்ளார்கள். அந்த வீட்டு உரிமையாளரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு முழக்கம் எழுப்பினார்கள். அதனால், தான் அவர்கள் கைது செய்யப்பட்டனர். கோலம் போட்டதற்காக மட்டும் கைது செய்யப்படவில்லை. என்று தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்ட்டவர்களுக்குப் பாகிஸ்தானைச் சேர்ந்த ‘அனைவருக்கும் தரவுப்புள்ளிகள்’ என்ற அமைப்புடன் தொடர்பு உள்ளது. அந்த அமைப்பை ‘அனைத்து பாகிஸ்தானிய இதழியலாளர் ஒருங்கிணைப்பு’ என்ற அமைப்பு நடத்துகிறது. எனவே, இவர்களுக்கும் பாகிஸ்தான் அமைப்புகளுக்கும் இடையேவுள்ள தொடர்பு குறித்து விசாரணை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சென்னையில் கோலம் போட்டதாக கைது செய்யப்பட்டவர்களுக்கு ஏற்கெனவே அறப்போர் இயக்கம் உள்ளிட்டவர்களுடன் தொடர்பு உள்ளது என்றும் தெரிவித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,384.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.