சில மாறுதல்களுடன்
புதிய ரூ.500 தாளை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. புதிய ரூ.500 மற்றும் ரூ.1,000
தாள்கள் செல்லாது என, கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி நடுவண் அரசு அறிவித்தது. இதற்கு
மாற்றாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2,000 தாள்கள்
அறிமுகம் செய்யப்பட்டன. இவை வழக்கத்தை விட அளவில் சிறியதாகவும், முற்றிலும் புதிய வடிவமைப்புடன் இருந்தன. தற்போது புதிய ரூ.500 தாளில் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, புதிய மகாத்மா காந்தி வரிசையிலான இந்த தாளில் ஏ என்ற ஆங்கில எழுத்து இடம் பெற்றுள்ளது. தற்போதைய தாளில்
இ என்ற ஆங்கில எழுத்து இருக்கும். இதுபோல் தற்போதைய தாளில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் ஆர் படேல் என்ற கையெழுத்து முன்புறம்
இடம்பெற்றிருக்கும். இது புதிய தாளில்; பின்புறம் இடம் பெற்றுள்ளது. ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள புதிய ரூ.500 தாளும் செல்லுபடியாகும்
என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. என்னவேனா பண்ணுங்கப்பா? என்னைக்குவேனா இந்தத்
தாளும் செல்லாதுன்னு சொல்லி ஏழை பாளைகளைத்தானே அலைகழிப்பீங்க? என்கின்றனர் பொதுமக்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.