Show all

ஆர்வம் காட்டும் பாஜகவினர்! ஐதராபாத் நகரத்தை பாக்யநகர் என்று அழைப்பதில்

ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர்கள் பலரும் ஐதராபாத் நகரத்தின் பெயரை பாக்யநகர் என மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

20,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: இசுலாமிய அறிஞர் முகம்மதின் மருமகனான, அலி இப்ன் அபி தாலிபின் மற்றொரு பெயர் ஐதர் என்பதால் ஐதாராபாத் என்று சூட்டினார்கள் சிலரும்,

முகம்மது குலி குதுப்சா ஐதராபாத் நகரத்தை நிறுவியபிறகு, பாக்யவதி என்ற பஞ்சார இனப்பெண்ணைக் காதலித்து மணந்து ஐதராபாத் நகரத்திற்கு பாக்யநகரம் என்ற பெயரைச் சூட்டினார் என்று சிலரும் ஐதராபாத் நகருக்கு அந்தப் பெயர் அமைந்ததற்கான காரணமாகத் தெரிவிக்கின்றனர். 

பாக்யவதி இசுலாமுக்கு மாறியபொழுது, அவள் தன் பெயரை ஐதர் மஹால் என்று மாற்றிக்கொண்டாள். இந்தக் காரணத்தால் இந்நகருக்கு உருது சொற்களான ஐதர் ஆ பாத் ஆகியவற்றைக் கொண்டு ஐதராபாத் என்ற பெயரைச் சூட்டினர், இதற்கு ஐதர் நீடூழி வாழ்க என்;று பொருளாகும். என்கிற காரணம் பாஜகவினருக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

தெலங்கானாவில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் பேசிய தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி, ஹைதராபாத் பெயரை பாக்யநகர் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

நடப்பு ஆண்டு இறுதியில் குஜராத், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும், அடுத்த ஆண்டில் கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. 

இந்த தேர்தலுக்கான வியூகத்தை வகுப்பது, முதலமைச்சர் வேட்பாளர், இதர வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக, இந்தச் செயற்குழு கூட்டம் பாஜகவினரால் முன்னெடுக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் அமித்சா பேசியபோது, இந்தியாவில் அடுத்த 30 ஆண்டுகளுக்கு பாஜகவின் ஆட்சிஅதிகாரம் தொடரும். தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா ஆகியவற்றிலும், மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் பாஜக விரைவில் ஆட்சியமைக்கும் என்று, தனது கனவுக்கோட்டை குறித்து பேசினார்.

இதனைத்தொடர்ந்து பேசிய தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி, பேசிய போது, தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தை பாக்யா நகர் என்று குறிப்பிட்டு பேசினார். பாக்யநகரில் தான் சர்தார் படேல் இந்தியாவை ஒருங்கிணைக்கும் 'ஏக் பாரத்' என்ற முழக்கத்தை உருவாக்கினார் என்று தெரிவித்தார். 

இதனால் ஐதராபாத் நகரின் பெயர் மாற்றப்படுமா என்று கேள்வி மக்கள் நடுவே எழுந்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, தெலுங்கானா மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்த பின் இதுகுறித்து அமைச்சர்களுடன் சேர்ந்து முதலமைச்சர் முடிவு எடுப்பார் என்று தெரிவித்தார். 

ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர்கள் பலரும் ஐதராபாத் நகரத்தின் பெயரை பாக்யநகர் என மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐதராபாத் உள்ளாட்சித் தேர்தல் கருத்துப் பரப்புதலின் போது, ஐதராபாத் பெயர் காரணம் நகரத்தின் பெயரை பாக்யநகர் என மாற்ற வேண்டும் என்று உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,299.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.