‘ராம் நாம் வங்கி’ என்ற பெயரில் ஒரு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு பணம்வழங்கும் இயந்திரம், காசோலை எல்லாம் கிடையாது. இந்த வங்கியின் பரிவர்த்தனை அனைத்துமே ‘ராமன்பெயர்’ தான். இந்த வங்கியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக உள்ளனர். அயோத்தி பிரச்னையில் சாதகமான தீர்வு ஏற்பட, வேண்டுதல்செய்து 1.25 லட்சத்துக்கு மேல் ராமன்பெயர் எழுதியவர்களுக்கு விழா எடுக்கவுள்ளதாக இந்த அமைப்பு அறிவித்துள்ளது. 02,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ‘ராம் நாம் வங்கி’ என்ற பெயரில் ஒரு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு பணம்வழங்கும் இயந்திரம், காசோலை எல்லாம் கிடையாது. இந்த வங்கியின் பரிவர்த்தனை அனைத்துமே ‘ராமன்பெயர்’ தான். இந்த வங்கியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக உள்ளனர். அயோத்தி பிரச்னையில் சாதகமான தீர்வு ஏற்பட, வேண்டுதல்செய்து 1.25 லட்சத்துக்கு மேல் ராமன்பெயர் எழுதியவர்களுக்கு பாராட்டுதல் வழங்க ‘ராம் நாம் வங்கி’ முடிவு செய்துள்ளது. பிரயாக்ராஜில் கும்பமேளா நடந்தபோது அயோத்தி பிரச்னையில் சாதகமான தீர்வு ஏற்பட ஒரு லட்சம் ராமன்பெயர் எழுதி வேண்டுதல் செய்ய வங்கியின் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தற்போது அயோத்தி வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைத்திருப்பதால், 1.25 லட்சத்துக்கு மேல் ராமன்பெயர் எழுதியவர்களுக்கு விழா எடுக்க இருப்பதாக ராம் நாம் வங்கியின் நிர்வாக குழு தெரிவித்தது. இது தொடர்பாக நிர்வாகக் குழு உறுப்பினர் குஞ்சன் வர்சினி கூறியதாவது: வங்கி சார்பில் ராமன்பெயர் எழுதுவதற்காக புத்தகம் வெளியிடப்பட்டது. இதில் தினமும் 108 முறை ராமன்பெயர் எழுதி தங்கள் பெயரில் வங்கியில் வைப்பு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. இதில் பலர் பங்கேற்றனர். மேலும் இதற்காக செல்பேசி செயலி ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டது. அயோத்தி தீர்ப்பு வெளியாகும் வரை ராமன்பெயர் எழுதி வைப்பு செய்யலாம் என கூறப்பட்டது. 1.25 லட்சத்துக்கு மேல் ராமன்பெயர் எழுதியவர்களுக்கு பாராட்டு வழங்க வங்கி முடிவு செய்துள்ளது. பிரயாக்ராஜில் அடுத்தஆண்டு நடக்கும் மகா மேளாவின் போது 1.25 லட்சத்துக்கு மேல் ராமன்பெயர் எழுதியவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும். அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து சான்றிதழ் மற்றும் தேங்காய் வழங்கப்படும். ஒரு கோடிக்கு மேல் ராமன்பெயர் எழுதியவர்களுக்கு மகா மேளாவில் தங்குவதற்கு இடவசதி செய்து கொடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இப்படியெல்லாம் கூடவா நடக்கும் என்று- மனித ஆற்றல், மற்றும் முயற்சிகளையே பெரிதாகக் கொண்டாடும் தமிழகம் மட்டுமே வியக்கிறது. மற்றபடி இந்தியா முழுக்க இது சாத்தியமானதாகவே இருக்கிறது. அந்த நெருப்பை மேலும் மேலும் தூண்டி விட்டு பாஜகவினர் நன்றாகக் குளிர் காய்கின்றனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,340
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.