ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவை விட்டு வேலைக்காக வெளிநாடு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் வேலை நிமித்தம் காரணமாக இந்தியாவில் இருந்து வெளியேறிய மக்களின் எண்ணிக்கை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. 21,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 75விழுக்காடு பங்களிக்கின்றன. உற்பத்தி காரணிகளான நிலம், உழைப்பு, மின்சாரம், நீர், உள்கட்டமைப்பு போன்றவற்றில் இந்த மாநிலங்களின் அரசுகள் முதன்மைப் பங்கு வகிக்கின்றன. உற்பத்தி காரணிகளான நிலம், உழைப்பு, மின்சாரம், நீர், உள்கட்டமைப்பு போன்றவற்றில் வளமை பெறாத பல வடஇந்திய மாநிலங்களின் மனிதவள ஏற்றுமதியின் மூலமும் இந்தியாவிற்கு கொஞ்சம் அன்னியச்செலாவணி கிடைத்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவை விட்டு வேலைக்காக வெளிநாடு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் வேலை நிமித்தம் காரணமாக இந்தியாவில் இருந்து வெளியேறிய மக்களின் எண்ணிக்கை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்தியாவில் இருந்து வேலைக்காக வெளிநாடு சென்றவர்களில் 32 விழுக்;காட்டு பேர்கள் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உத்தரபிரதேசத்தை அடுத்து பீகார் மாநிலத்தில் இருந்து அதிகளவில் வெளிநாட்டுக்கு வேலைக்காக சென்றுள்ளனர். இந்தியர்கள் பெரும்பாலும் ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், ஈராக், இந்தோனேசியா, சவுதி அரேபியா, குவைத், ஜோர்டான், லிபியா, லெபனான், மலேசியா, ஓமன், கத்தார், சூடான், சிரியா, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 17 நாடுகளுக்கு அதிகம் சென்றுள்ளனர். வேலைக்காக வெளிநாடு செல்லும் இந்தியர்கள் அங்கு சம்பாதிக்கும் பணத்தை இந்தியாவில் உள்ள தங்கள் உறவினர்களுக்கு, குடும்பத்தினர்களுக்கு அனுப்பி வருவதால் இந்தியாவின் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது என பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் 28 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் வேலைக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,332.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.