Show all

ஒன்றிய பாஜக அரசின் அதிர்ச்சி அறிவிப்பு! இந்தியாவில் ஹிந்துத்துவா வேதக்கல்விக்கு என்று, தனியாக வாரியம்

இந்தியாவில் ஹிந்துத்துவா வேதக்கல்வியை அரசே நடத்தும் வகையில் தனியாக கல்வி வாரியம் ஒன்றை அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டு இருக்கிறது.

12,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: இந்தியாவில் வேதக்கல்விக்கு என்று தனியாக வாரியம் ஒன்றை அமைக்க இருப்பதாக ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

ஒன்றிய அரசால்- ஒன்றிய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), இடைநிலைக் கல்விக்கான இந்திய சான்றிதழ்  (ஐசிஎஸ்இ) ஆகிய வாரியங்களின் கீழ் பள்ளிகள் வகுப்புகள் எடுக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 

தமிழ்நாட்டில் மெட்ரிகுலேசன், தமிழ்நாடு கல்வி வாரியம் என்று 2 கல்வி வாரியங்கள் செயல்பட்டு வந்த நிலையில் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. அனைத்து வகை மாணவர்களும் ஒரே வகையிலான பாடங்களை படிப்பதற்கு இது வாய்ப்பாக அமைந்தது. 

தற்;போது ஒன்றிய பாஜக அரசு புதிய கல்விக்கொள்கையை கொண்டு வந்து மாநிலங்களில் நடைமுறைப்படுத்தும் பணியில் தீவிரமாக இறங்கி இருக்கிறது. இதற்கு தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்பு உள்ளது. 

இதற்கிடையே இந்தியாவில் ஹிந்துத்துவா வேதக்கல்வியை அரசே நடத்தும் வகையில் தனியாக கல்வி வாரியம் ஒன்றை அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டு இருக்கிறது. 

இதுகுறித்து பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு விடையளித்த ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார், ஹிந்துத்துவா வேதக்கல்விக்கு என்று தனித்துவமாக மகரிஷி சாந்திபனி ராஷ்ட்ரிய வேஹ்ட சமஸ்கிருத சிக்ஷா வாரியம் மற்றும் பாரதிய சிக்ஷா வாரியம் அகியவை அமைக்கப்படும் என்று கூறி இருக்கிறார். 

இந்தியாவில் ஹிந்துத்துவா வேதக்கல்வி முறையை வளர்ப்பதற்காக ஒன்றிய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னாட்சி அமைப்புகளில் ஒன்றான உஜ்ஜெய்னை சேர்ந்த மகரிஷி சாந்திபனி ராஷ்ட்ருட வேத வித்யா பிரதிஷ்தான் உதவியுடன் இந்த 2 வாரியங்கள் அமைக்கப்படும் என்றார். 

இந்த கல்வி வாரியங்கள் பிறகு நடப்பு கல்வி வாரியங்களை போன்று செயல்படும் என்றும், ஹிந்துத்துவா வேதங்களை நவீன கல்வியுடன் இணைக்கும் நோக்கில் இது உருவாக்கப்படுவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,323.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.