உச்சநீதிமன்றத் தலைமை அறங்கூற்றுவர்ளால், ‘நீதிமன்ற
அவமதிப்பு’ வழக்கில் தண்டனை அறிவிக்கப்பெற்று
தலைமறைவாக உள்ளவர் அறங்கூற்றுவர் கர்ணன். தமிழகத்தைச்
சேர்ந்த இவர், கொல்கத்தா உயர்நீதிமன்ற அறங்கூற்றுவராகப் பதவி வகித்துவந்தார். சில மாதங்களுக்கு
முன்னர், தன் சக அறங்கூற்றுவர்கள் மீது ஊழல் புகார் தெரிவித்திருந்தார். இதையொட்டி,
உச்சநீதிமன்றத்தின் தன்னார்வ விசாரணை என்று இறுதியாக அறங்கூற்றுவர் கர்ணன் மீது பல
குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. உச்சநீதிமன்ற
அறங்கூற்றுவர்களுக்கே தண்டனை விதித்த அறங்கூற்றுவர் கர்ணன் மீது அடுக்கடுக்கான வழக்குகள்
பதிவு செய்யப்பட்டு, சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதையொட்டி, உயர்நீதிமன்ற அறங்கூற்றுவராக
இருந்த கர்ணன், தன் பதவிக்காலத்திலேயே தலைமறைவானார். சுமார் ஒரு மாத காலம் தலைமறைவாக
வாழ்ந்துவரும் அறங்கூற்றுவர் கர்ணனின் பதவிக்காலம் இன்றோடு நிறைவுறுகிறது. இதையடுத்து,
அறங்கூற்றுவர் கர்ணனைத் தேடும் முடங்கிக்கிடந்த பணி, மீண்டும் முடுக்கிவிடப்படும் என
காவல்துறை அதிகாரிகள் தெரிவித்து வருவதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. உச்சநீதிமன்ற
அறங்கூற்றுவர்களால் சிறைத்தண்டனை விதிக்கப் பெற்ற முதல் உயர்நீதிமன்ற அறங்கூற்றுவர்,
தலைமறைவாக இருக்கும்போது பணி ஓய்வு பெற்ற அறங்கூற்றுவர் எனப் பல பெயர்கள் அறங்கூற்றுவர்
கர்ணன் மீது சுமத்தப் பட்டுள்ளது. அறங்கூற்றுவர்
கர்ணன் அவர்களுக்கு ஏன் இந்த அவலம் என்பது, எப்போதவது வெளிவருமா என்று தெரியவில்லை.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.