Show all

சூலை 6அன்று புதிய இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்க உள்ளவர் குஜராத்காரர்

64 அகவை அச்சல் குமார் ஜோதி ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி. 1975-ம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பணியாற்றத் தொடங்கி பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார்.

     இந்நிலையில் தற்போதைய இந்திய தலைமைத்தேர்தல் ஆணையரின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி புதிய ஆணையராக அச்சல் குமார் ஜோதி நியமிக்கப்பட்டுள்ளார். இயந்திர வாக்குப் பதிவு, இரட்டை இலை சின்னத்தை யாருக்கு வழங்குவது போன்ற முடிவுகள் தேர்தல் ஆணையத்தின் கையில் இருக்கும் நிலையில், குஜராத் மாநில ஐஎஎஸ் அதிகாரி ஒருவர் தேர்தல் ஆணையத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது அனைவரின் கவனத்திற்கும் வராமல் போகவில்லை.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.