இந்த ஆண்டு எண்ணாயிரம் பேர்கள் இந்தியாவை விட்டு வெளியேறப்போகிறார்கள் என ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. 01,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: இந்தியப் பணக்காரர்கள், வணிகக் குடும்பங்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் எனப் பலரும் இந்தியக் குடியுரிமையை விடுத்து வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளில், சிறந்த கல்வி, மேம்படுத்தப்பட்ட மருத்துவச் சேவை, மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை முறை, சுழியம் வருமான வரி, எளிதான வணிகத் தொடர்புகள் எனப் பல காரணம் கூறப்பட்டாலும், இந்தியாவில் இயல்பாக வளரமுடிய வில்லை என்பது பலரின் குற்றச்சாட்டு. இந்நிலையில் இந்த ஆண்டு எத்தனை பேர்கள் இந்தியாவை விட்டு வெளியேறப்போகிறார்கள் என ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. ஆனால், இந்த இந்தியப் பணக்காரர்கள், வணிகக் குடும்பங்கள், தொழில்நுட்ப வல்லுனர்களை இந்தியாவில் தக்க வைப்பது பெரும் அறைகூவலாக இருக்கும் என இந்தியாவை விட்டு வெளியேறி வருவதைச் சுட்டிக்காட்டி ஹென்லி பங்காளர் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஹென்லி பிரைவேட் வெல்த் மைக்ரேஷன் டாஷ்போர்டின் தரவுகள் படி இந்த ஆண்டு இந்திய பணக்காரர்களில் சுமார் 8,000 பேர் நாட்டை விட்டு வெளியேற உள்ளனர் என ஹென்லி பங்காளர் நிறுவனம் கணித்துள்ளது. இந்தியாவை விட இன்னும் இரண்டு நாடுகளில் பத்தாயிரம், பதினைந்தாயிரம் என்று வெளியேற்ற விரும்பிகள் இருப்பதாக அதே ஆய்வறிக்கை பட்டியல் இட்டாலும், அந்த நாடுகள் பொதுவுடைமை சிந்தாந்த நாடுகள் என்பதால் அவைகளை இந்தியாவோடு பொருத்தி நம்மால் ஆறுதல் அடையமுடியவில்லை. ஆக இந்தியாவில் பணக்காரர்கள் ஆகாமல் ஏழையாகவே இருப்பதையே அரசும் சட்டமும் நிருவாகமும் விரும்புகிறதா என்ற கேள்வியே நமக்குள் எழுகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,280.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.