Show all

ஆடவை! செயற்கை நுண்ணறிவில் தமிழில் அசத்தும் செயலி

05,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5126:

தமிழ் உள்ளிட்ட ஒன்பது இந்திய மொழிகளில் ஆடவை (ஜெமினி) செயற்கை நுண்ணறிவு செல்பேசி செயலியை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி, குஜராத்தி, உருது மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில், ஜெமினி செயற்கை நுண்ணறிவு செல்பேசி செயலி கூகுள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இது குறித்து கூகுளின் தலைவர் சுந்தர்பிச்சை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட 9 இந்திய மொழிகளில் ஆடவை செயலியை அறிமுகப்படுத்தி உள்ளோம். உள்ளூர் மொழிகளையும், பல புதிய கூறுகளையும் சேர்த்து, அச்சார ஆடவை (ஜெமினி அட்வான்ஸ்டு) மற்றும் ஆங்கிலத்தில் கூகுள் சேதியில் (மெஸ்சேஜ்) ஆடவையை அறிமுகப்படுத்துகிறோம். 

செயலியை பதிவிறக்கம் செய்வது எப்படி?
ஆடவை செயலியை கூகுள் விளையாட்டுக்கடையில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். கணிதம், இயற்பியல், வரலாறு, மருத்துவம் என 57 பாடங்களின் சந்தேகங்களுக்கு தீர்வை கொடுக்கும். ஆடவை செயலியால் குறியீடு எழுதவும் முடியும்.

ஏற்கனவே, துருக்கி, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலும் ஆடவை செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,72,018. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.