Show all

சுப்பிரமணியன் சாமி சொல்வது என்ன! இந்திய அரசின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவுகள் போலியா

ஒன்றிய அரசு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்;தி 8.4 விழுக்காடு வரையில் வளர்ச்சி அடைந்து உள்ளதாகக் கூறுகிறது. இது போலியாக உருவாக்கப்பட்ட தரவுகளா அல்லது பணவீக்கத்தைச் சரியாக ஒழுங்கு செய்யவில்லையா' என்று கேட்டதற்கு, சுப்பிரமணியன் சாமி இரண்டும் தான் என்று நாசுக்காக பதில் அளித்துள்ளார்.  

17,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: உலக நாடுகளை அச்சுறுத்திவரும் பணவீக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வரும் வேளையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இந்தியாவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் குறித்து கேள்விகளை எழுப்பினர். 

இந்தியப் பொருளாதாரம் மந்தநிலை அல்லது தேக்கநிலைக்குத் தள்ளப்படுவது குறித்துக் கேள்வி தேவையில்லை என ஒன்றிய  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் கூறினார். ஒன்றிய அரசு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், நாட்டின் கடனையும் திறமையாக நிர்வகித்துள்ளது என்றும் கூறினார். 

நிர்மலா சீதாராமனின் இந்த விடையை, சுப்பிரமணியன் சாமி தனது கீச்சுப்பக்கத்தில் திறனாய்வு செய்துள்ளார். இந்திய பொருளாதாரம் மந்தநிலை அல்லது தேக்கநிலை தள்ளப்படுவது குறித்துக் கேள்வியே இல்லை என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்வது சரிதான். ஏன்னெறால் இந்திய பொருளாதாரம் கடந்த ஆண்டே மந்தநிலைக்குள் சென்றுவிட்டது. எனவே மந்தநிலைக்குள் செல்லுமா என்ற கேள்வி எழாது எனச் சுப்பிரமணியன் சாமி பகடியாடியுள்ளார்.

சுப்பிரமணியன் சாமி கீச்சுக்கு அதுல் என்பவர், 'ஆனால் ஒன்றிய அரசு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்;தி 8.4 விழுக்காடு வரையில் வளர்ச்சி அடைந்து உள்ளதாகக் கூறுகிறது. இது போலியாக உருவாக்கப்பட்ட தரவுகளா அல்லது பணவீக்கத்தைச் சரியாக ஒழுங்கு செய்யவில்லையா' என்று கேட்டதற்கு, சுப்பிரமணியன் சாமி இரண்டும் தான் என்று நாசுக்காக பதில் அளித்துள்ளார்.  

மேலும் ஒருவர் சாமி அவர்களே! உங்க கீச்சு, பக்தாள்களுக்குப் பிடிக்காது, அவர்களைப் பொறுத்த வரையில் நாம் இப்போது 'அமிழ்து கால'த்தில் இருக்கிறோம் என கீச்சுப் பதிவிட்டுள்ளார்.

இதற்கும் பகடியாடியுள்ள சுப்பிரமணியன் சாமி மோடி பக்தர்கள் இயல்பிலேயே படிப்பறிவில்லாதவர்கள் அல்லது போலியான கல்விச் சான்றிதழ்களைக் கொண்டவர்கள். 5 டிரில்லியன் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்;தி குறித்துச் செம்மறி ஆடுகளைப் போலத் துள்ளிக்குதித்த பின்பு, இப்போது மந்தநிலை இல்லை என்று சொல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

கடந்த மாதத்தில் இந்தியாவின் சரக்குசேவை வரி தண்டல் 28 விழுக்காடு அதிகரித்து 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. உற்பத்தித் துறை குறியீடு 53.9 புள்ளிகளிலிருந்து 56.4 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இதேபோல் மின்சாரப் பயன்பாடு கடந்த ஆண்டை காட்டிலும் 2.9 விழுக்காடு அதிகரித்து 129 பில்லியன் அலகுகளாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விற்பனை 12 விழுக்காடு மற்றும் 18 விழுக்காடு வரையில் உயர்ந்துள்ளது. இவை அனைத்தும் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யும் காரணிகளாக இருந்தாலும் பணவீக்கம் என்ற ஒன்றை இன்னும் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது என்பது பொருளாதார வல்லுனர்கள் அனைவரும் சுட்டிக்காட்டும் பெருங்குறையாகும்.

மக்கள் உழைப்பை வரியாக மிகுதியாக வாங்கி குவித்துக் கொண்டால் பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட மாட்டாது. பணத்திற்கு இணையான தங்கத்தின் வைப்பை அதிகம் கொண்டிருக்கும் நாடுகளின் பணமதிப்பே உச்சத்தில் இருக்கிறது என்பது வரலாறு ஆகும். 

அதற்கு மக்களிடம் பணம் புழங்க வேண்டும். மக்களிடம் புழங்கும் பணம் மறு உற்பத்தி ஈட்டும். அரசிடம் புழங்கும் பணம் அதிகாரிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் சம்பளமாகவும். சுருட்டல்களாகவும் வீணாகும். அவர்களிடம் தேங்கும் பணம் இறக்குமதிகளுக்கே பயனாகி அன்னிய செலாவணி தேய்ந்து பணவீக்கத்தை மேலும் உயர்த்தும். சுப்பரமணியன் சாமி சொல்லுகிற மாதிரியான இந்த பக்தர்களுக்கு அது என்றைக்கும் புரியப் போவதில்லை.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,328.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.