உலக சட்டங்களிலேயே இல்லாத யுக்தியாக, ஹிந்தி அலுவலக மொழிக்கு பதினைந்து ஆண்டுகளுக்கு மட்டும் செல்லுபடியாகும் ஒரு சட்டத்தை அமைத்துச் சென்றார் சட்டப்பேரறிஞர் சமூகநீதிக் காவலர் அண்ணல் அம்பேத்கார் அவர்கள். ஐம்பத்தியாறு ஆண்டுகளுக்கு முன்பே காலவதியாகும் வகைக்கு. அந்த யுக்தியைப் பயன்படுத்தி ஹிந்தி அகற்ற- அறிவுடையார் ஆவதறிவார் என்ற குறளை நாம்தாம் மறந்து போனோம் 26,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: உலக சட்டங்களிலேயே இல்லாத யுக்தியாக, ஹிந்தி அலுவலக மொழிக்கு பதினைந்து ஆண்டுகளுக்கு மட்டும் செல்லுபடியாகும் ஒரு சட்டத்தை அமைத்துச் சென்றார் சட்டப்பேரறிஞர் சமூகநீதிக் காவலர் அண்ணல் அம்பேத்கார் அவர்கள். சட்டப்பேரறிஞர் சமூகநீதிக் காவலர் அண்ணல் அம்பேத்காரின் அந்த யுக்தி வகையில், ஐம்பதியாறு ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியாவின் அலுவல்மொழியாக ஹிந்தியை மாற்றும் வகைக்கு அமைக்கப்;பட்ட சட்டப்பிரிவு பதினேழு காலவதியாகிவிட்டது. இந்தியாவின் அலுவல்மொழியாக ஹிந்தியை மாற்றும் வகைக்கு அமைக்கப்;பட்ட சட்டப்பிரிவு பதினேழு காலவதியாகும் நாளிலிருந்து இந்தியாவின் அலுவல் மொழியை நடைமுறைப்படுத்தும் செயல்பாட்டிற்கு அட்டவணை எட்டையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை நோக்கில் அமைந்திருந்திருக்கின்றார்கள் சட்டப்பேரறிஞர் சமூகநீதிக் காவலர் அண்ணல் அம்பேத்கார். சட்டப்பிரிவு பதினேழு காலவதியான ஆண்டில் ஒன்றிய அரசின் ஹிந்தித் திணிப்பும், தமிழ்நாட்டில் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டமும் வலுவாக முன்னெடுக்கப்பட்டன. அந்த நேரத்திலேயே ஒன்றிய அரசு, ‘கவலை வேண்டாம்! சட்டப்பிரிவு பதினேழை அந்தச் சட்டப்பிரிவில் சொல்லப்பட்ட காலக்கெடுவான, பதினைந்து ஆண்டுகளில் எங்களால் ஆங்கிலத்திற்கு மாற்றாக ஹிந்தியை நிறுவும் வகைக்கு- மாறாக இன்னும் ஒரு ஐந்து ஆண்டுகள் காலக்கெடு கொடுங்கள் மக்களிடம் ஹிந்திக்கு அனுமதி பெற்றுவிடுகிறோம் என்று கெஞ்சிக் கேட்க வேண்டிய அப்போதைய ஒன்றிய காங்கிரஸ் அரசு- அன்றைக்கு தமிழ் மக்களோடு வலுவான ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போரட்டத்தில் கைகோர்த்த, திமுக தற்போது தமிழ்நாட்டின் ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. ஹிந்தி திணிப்புக்கு எதிரான பல மாநிலக்கட்சிகள் திமுகவோடு நட்பு பாராட்டுகின்றன. அடுத்த கிழமையில் வருகிறது விடுதலைநாள்! காலவதியான சட்டப்பிரிவில் ஹிந்தியை அமரவைத்து காஷ்மீருக்கும் தமிழ்நாட்டு எல்லைக்கும் ஊஞ்சலாட்டி மகிழும் காங்கிரசு பாஜக முயற்சிக்கு முடிவுகட்ட உறுதிமொழி ஏற்போம்.
இந்திய மக்களிடம் ஹிந்தித் திணிப்பை முன்னெடுக்க மக்கள் விருப்பத்தைப் பெறும் வகைக்கு-
15 ஆண்டுகள் காலக்கெடு கொடுத்தும் கருத்துப்பரப்புதலிலோ, முன்னெடுத்த அதிகாரப்பாட்டு முயற்சிகளிலோ எங்களால் வாகை சூட இயலாததால்-
இனி ஹிந்தி-
அட்டவணை எட்டின் படி தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளுக்கு இணையாகவே மதிக்கப்படும்’ என்று தெரிவித்திருக்க வேண்டும்.
மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே தொடரும் என்று உறுதிமொழி அளித்து விட்டு, கடந்த ஐம்பத்தியாறு ஆண்டுகளாக காங்கிரசும் பாஜகவும்! காலவதியான சட்டத்தில் ஹிந்தியை அமரவைத்து காஷ்மீருக்கும் தமிழ்நாட்டு எல்லைக்கும் ஊஞ்சலாட்டி மகிழ்ந்து கொண்டிருக்கிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.